Connect with us

Cinema News

என்னது லீக் ஆகுதா?.. எங்க பார்க்கச் சொன்ன அசோக் செல்வன் எங்க பார்க்குறாரு பாருங்க.. மானம் போச்சே!

கடந்த வாரம் மனைவி கீர்த்தி பாண்டியன் படத்துடன் போட்டியாக வெளியாகவிருந்த சபா நாயகன் திரைப்படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், நாளை வெளியாகிறது.

பாலிவுட்டில் டங்கி, டோலிவுட்டில் சலார், ஹாலிவுட்டில் அக்வாமேன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில் இந்த வாரம் கோலிவுட்டில் அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் திரைப்படம் வெளியாகிறது.

இதையும் படிங்க: என் மகனை ரஜினியிடம் காட்டி ‘யார் போல் இருக்கிறான்?’ என கேட்பேன்!.. பலவருடங்கள் கழித்து பேசும் நடிகை..

இந்த ஆண்டு அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடித்த போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள சபா நாயகன் திரைப்படம் எப்படி இருக்கும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. கெமிஸ்ட்ரி லேபில் அசோக் செல்வன் மாணவி ஒருவருடன் இணைந்து பணியாற்றும் வேலை தனக்கு மட்டும் கிடைத்தது என கெத்தாக கூறி வரும் நிலையில், டியூபில் இருந்து கெமிக்கல் லீக் ஆவதை அந்த மாணவி சொல்ல, உடனடியாக தனது பேன்ட்டை அசோக்செல்வன் பார்க்க ஒட்டுமொத்த கிளாஸும் அவரை அசிங்கப்படுத்தி சிரிக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பாகுபலி ரேஞ்சுக்கெல்லாம் இப்போ பிரபாஸ் கனவு காணவே முடியாது!.. தமிழ்நாட்டுல சலார் சேல் ஆகலயாம்!..

சி.எஸ். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மறைந்த நடிகர் மயில்சாமி கடந்த வாரம் வெளியான கண்ணகி படத்தில் நடித்த நிலையில், இந்தப் படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top