தெரியாம உளறிட்டேன்... தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க!....அஸ்வின் விளக்கம்...

by சிவா |   ( Updated:2021-12-08 06:59:57  )
ashwin
X

சில சீரியல்களில் நடித்திருந்தாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். இவர் என்ன சொல்லப்போகிறாய் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் ‘எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. இயக்குனர்கள் என்னிடம் கதை கூறும்போது கதை பிடிக்கவில்லை எனில் தூங்கி விடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் கதைதான்’ எனப்பேசியிருந்தார்.

இது திரையுலகினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உதவி இயக்குனர்கள் இவர் மீது கோபம் அடைந்துள்ளனர். அவரின் பேச்சு கதை சொல்ல வரும் இயக்குனர்களை அவமதிப்பதாக உள்ளது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.ஒருபக்கம் நெட்டிசன்கள் அஸ்வினை கிண்டலடித்து மீம்ஸ்களை உருவாக்க துவங்கிவிட்டனர்.

ashwin

இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள அஸ்வின் ‘முதலில் நான் சீரியஸாக் பேசவில்லை. மிகவும் சந்தோசத்தில் இருந்ததால் ஒருவித படபடப்பிலும், நடுக்கத்துடனும் இருந்தேன். அந்த சூழலில் நான் எப்படி ஆணவமாகவும், திமிறாகவும் பேச முடியும். நல்ல கதைகளில் நடிக்கனும்னு ஆசைப்படுறேன். எனவே, அந்த மாதிரி கதையைத்தான் நான் தேர்வு செய்வென்னு சொல்ல வந்ததை 40 கதை கேட்டு தூங்கிட்டேன்னு ஜாலியா பேசிட்டேன்.

ஒரு குத்து மதிப்பாதான் அப்படி சொன்னேன். என் படம்தான் மாஸ். மத்தவங்க படம்லாம் தூசு என நான் பேசவில்லை. வாயில் வந்த 40ஐ சொல்லி விட்டேன். அதில் உண்மையில்லை. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் ஏதேதோ உளறுகிறேன். என்னை மன்னித்தி விடுங்கள் எனக்கூறிவிட்டுத்தான் மேடையிலிருந்து சென்றேன். ஆனால், அது யாருக்கும் தெரியவில்ல்’ என தெரிவித்துள்ளார்.

Next Story