ஜோதிகாவுக்கு பதிலா நான் வரேன்!.. சூர்யாவிடம் பிரச்சனை செய்த அசின்.! இப்படியும் நடந்துச்சா…

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அசின். சினிமாவிற்கு வந்த சில நாட்களிலேயே வரிசையாக பெரும் நடிகர்கள் படங்களில் வாய்ப்புகள் பெற்று பெரும் உயரத்தை தொட்டார். இத்தனைக்கும் அசின் எந்த படத்திலும் பெரிதாக கவர்ச்சியாக கூஅ நடித்ததில்லை.
இருந்தாலும் அவரது தனிப்பட்ட நடிப்பின் காரணமாக தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார். போக்கிரி திரைப்படம் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த கஜினி திரைப்படமும் அவருக்கு அதிக வரவேற்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

Asin
அசின் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களை அவரது தந்தைதான் தேர்ந்தெடுப்பார். அசின் நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அதில் அசினை நடிக்க வைப்பார் அவரது தந்தை.
அசின் போட்ட கண்டிஷன்:
இந்த நிலையில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் அசினை நடிக்க வைக்கலாம் என நினைத்தார் சூர்யா. ஏனெனில் ரஜினி திரைப்படத்திலேயே அசின்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தவர் சூர்யாதான்.

sillunu oru kadhal
அதில் பூமிகா நடித்த கதாபாத்திரத்தில் அசினை நடிக்க வைக்க முடிவு செய்தனர். ஆனால் அசினின் தந்தை ஜோதிகா கதாபாத்திரத்தை அசினுக்கு கொடுத்தால்தான் அவர் நடிப்பார் என்று கூறிவிட்டார்.
அசினும் அப்படியே சூர்யாவிடம் கூறிவிட்டார், ஆனால் பூமிகாவின் கதாபாத்திரமும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம்தான் என்றாலும் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் அசின். அதற்கு பிறகு தான் இந்த கதாபாத்திரத்தில் பூமிகாவை நடிக்க வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:குத்துவிளக்க பெட்ரூம்ல வச்சா நல்லாவா இருக்கும்? தலை தெறிக்க ஓடிய அசின்! மிஸ் ஆன அஜித் பட வாய்ப்பு