சிம்பு கிட்ட இருந்து எவ்ளோனாலும் வெரைட்டி கொடுக்கலாம்… அஸ்வத் கொடுத்த அப்டேட்!

STR 51
STR 51: சிம்புவை ஆரம்பத்தில் தமிழ்சினிமா உலகில் விரல் வித்தைக்காரர்னு சொல்லி கிண்டல் பண்ணினாங்க. ஏன்னா அவரு பாடல், ஸ்டைல்னு எதை எடுத்தாலும் விரலால் தான் காட்டுவார். அந்த வகையில் அவரை அப்படி சொல்வார்கள். அதன்பிறகு தனது நடிப்பிலும் கவனம் செலுத்தினார்.
டான்ஸ், பைட்னு எல்லாமே அவருக்கு அத்துப்படி ஆனது. சிறந்த பாடகர், இயக்குனர்னு சொல்லிக் கொண்டே போகலாம். தற்போது சிம்பு மணிரத்னம், கமல் காம்போவுடன் இணைந்துள்ள தக் லைஃப் படம் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு அவரோட லெவலே வேற தான் என்கிறார்கள். தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து செம ஆட்டம் போட்டுள்ளார்.
அதே நேரம் படத்தில் சண்டைக்காட்சியிலும் அதகளப்படுத்தி இருக்கிறாராம். கமலுடனேயே மோதும் சண்டைக்காட்சி பேசப்படும் வகையில் இருக்கும் என்கிறார்கள். இதைத்தொடர்ந்து டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவுடன் அடுத்த படத்தில் இணைய உள்ளார் சிம்பு. இதுகுறித்து படத்தின் இயக்குனர் கொடுத்த அப்டேட் இதுதான்.
எஸ்டிஆர் 51 கண்டிப்பா ரசிகர்களின் படமாக இருக்கும். சிம்பு சார் கிட்ட நிறைய திறமை இருக்கு. எவ்ளோனாலும் எடுத்துக்கலாம். தில் ராஜா சாரோட மீம் தான். எடுத்து போடுங்க. பாட்டு வேணுமா இருக்கு. டான்ஸா, ஃபைட்டா, ரொமான்ஸா, அசஷனா, எமோஷனா, என்ன வேணாலும் பண்ணுவாரு.

எஸ்டிஆர் சாரை வைத்து நம்ம என்ன வேணாலும் பண்ணலாம். அவருடைய ஃபேன்ஸ்சுக்கு இது ஒரு மெகா ட்ரீட்டா இருக்கும். நீங்க எதிர்பார்க்காத விஷயங்களும் அதில் இருக்கும். செப்டம்பர்ல சூட் ஆரம்பிச்சிடுவோம். அடுத்த வருஷம் படம் வந்துடும் என்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு காட் ஆஃப் லவ் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் பேமிலி மற்றும் பிரண்ட்ஸ் என இருதரப்பினரும் கலந்து பார்க்கும் ஃபேன்டஸி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.