11 வயசிலேயே அஜித்திடம் தன் காதலை சொன்ன நடிகை! பிஞ்சிலே பழுத்தது போல - யார் தெரியுமா?
Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு ஹேண்ட்ஸமான ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் அஜித். நேற்று துபாய் சென்ற நிலையில் இன்று விடாமுயற்சிக்காக படப்பிடிப்புகள் தொடங்குகின்றன.
படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.மற்ற நடிகர்களை பற்றி இன்னும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. படத்தை லைக்கா தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: அம்ருதாவை நெருங்கிய கணேஷ்…! மருத்துவமனை வந்த ராதிகா… அதிர்ச்சியில் மாலினி..!
அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மனதில் அதிக கவனம் பெற்றது. அதனால் இந்த விடாமுயற்சி திரைப்படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
சமீபகாலமாக ஆக்ஷன் ஹீரோவாகவே பிரகாசித்து வரும் அஜித் ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க படமாக நீ வருவாய் என திரைப்படம் விளங்கியது.
இதையும் படிங்க: அம்மாவுக்கு சளைச்சது இல்ல பொண்ணு… அடேங்கப்பா…பிக்பாஸ் ஜோவிகா இவ்ளோ பண்ணியிருக்காங்களா!…
அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சரண்யா நாக். இவர் காதல் திரைப்படத்தில் சந்தியாவுக்கு பள்ளித் தோழியாகவும் நடித்திருப்பார். நீ வருவாய் என படத்தில் தேவயாணிக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு டூயட் பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்களாம். அதை பார்த்துக் கொண்டே இருந்தாராம் சரண்யா நாக்.
இடைவேளை சமயத்தில் நேராக அஜித்திடம் ஓடி உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என சரண்யா கூறினாராம். அதற்கு அஜித் ‘அண்ணன் என்றும் சொல்ல மாட்டிக்க. சார் என்றும் சொல்ல மாட்டிக்க. அப்புறம் எதுக்கு புகைப்படம் எடுக்கனும்’ என்று கேட்டாராம். ஆனால் மறுபடியும் சரண்யா உங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கனும் என கேட்டுக் கொண்டே இருந்தாராம்.
இதையும் படிங்க: விஜய்க்கு கெட் அவுட்டு!.. அஜித்துக்கு கட் அவுட்டா?.. த்ரிஷாவின் ராங்கித்தனம் தாங்கலையே பாஸ்!
சரி என கேமிரா மேனை அழைத்து அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம். அதன் பிறகு சரண்யா அஜித்தை பார்த்துக் கொண்டே இருந்தாராம். என்ன இப்படி பாத்துட்டே இருக்கே என அஜித் கேட்டாராம். அதற்கு சரண்யா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொன்னாராம்.
அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்றும் கேட்டாராம். அதுக்கு வெட்கப்பட்டாராம்.அதன் பிறகு சரண்யா நான் கொஞ்ச நாள் கழிச்சு வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி ஓடிவிட்டாராம்.