நைட் ஃபுல்லா தளபதிய பாத்துட்டே இருப்பேன்... பிறந்தநாளுக்கு அத செஞ்சே ஆகணும்... வெட்கப்படும் இளம் நடிகை...

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் கண்டிப்பாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்துவிடுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் விஜய்யை பிடிக்காத ஆளே இருக்கமுடியாது. ஏனென்றால், அவருக்கு என தனி குடும்ப ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவரது படங்கள் வெளியாகும் போது, முதல் நாள் முதல் காட்சி அன்று திரையரங்குகிற்கு வரும் கூட்டம் அதற்கு உதாரணம். இதையும், தண்டி திரையுலகில் உள்ள பல பிரபலங்களும் விஜயின் நடனத்தை பார்த்து, அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி, தான் நடிகை அதுல்யா ரவியும் கூட, விஜியின் தீவிர ரசிகையாம். சமீபத்திய ஒரு நேர்கணலில், இவர் விஜய் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்- எப்போ கூப்பிட்டாலும் வரணும்.! ‘அந்த’ இளம் நடிகைக்கு கடிவாளம் போட்ட லாரன்ஸ்…
விஜய் தொடர்பாக அவர் பேசியது " நான் விஜய் சாருடைய மிகப்பெரிய ரசிகை. இப்போ வரைக்குமே ஒரு நைட் புல்லா தூங்காம தளபதியோட பழைய படத்திலிருந்து தொட்ட பெட்ட ரோட்டு பாட்டிலிருந்து இப்போ வந்த பாட்டுவரைக்கும் எல்லாமே என்னால பார்க்க முடியும். அந்த மாதிரி இப்போ, சமீபத்தில் கொரோனா காலத்தில் கூட பண்ணிருக்கேன். எனக்கு அந்த அளவுக்கு அவரை பிடிக்கும்.
என்னுடைய நண்பர்கள் கூட கேப்பாங்க, பழைய பாட்டெல்லாம் பாக்க, உனக்கு போர் அடிக்கலையானு கேப்பாங்க. எனக்கு போர்லாம் அடிக்காது. அவருடைய நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால அவருடைய பிறந்த நாளுக்கு நான் சூப்பராக நடனம் ஆடி அந்த நடன வீடியோவை அவருக்கு சமர்ப்பிக்க ஆசை" என அதுல்யா பேசியுள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் சீக்கிரம் அதுல்யாவுக்கு விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என கூறிவருகிறார்கள்.