திருடுனேன் ஆனா திருடல… எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் காமெடி செய்த அட்லீ… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!

Atlee: காப்பி கேட் என்றால் அது கோலிவுட்டில் அட்லீக்கு தான் பொருத்தமான பெயராகி இருக்கிறது. ஒரு படத்தினை எடுத்தால் அதில் டாப் ஹிட் அடித்த பல படங்களின் சாயல் அப்பட்டமாகவே இருக்கும். இதுகுறித்து அட்லீ சொல்லி இருக்கும் சில விஷயங்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காகி இருக்கிறது.

கோலிவுட்டில் ராஜா ராணி திரைப்படம் மூலம் எண்ட்ரியானார். ரிலீஸான பின்னர் அந்த படம் மௌன ராகம் படத்தின் காப்பி என பல கிசுகிசுக்கள் எழுந்தது. ஒரு பக்கம் விமர்சனம் வந்தாலும் படம் அமோக வசூல் படைத்தது. நண்பன் படத்தின் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் விஜயை வைத்து இரண்டாம் படத்தினை இயக்கினார் அட்லீ. தெறி படம் ரிலீஸாகி அமோக வசூலை தட்டி தூக்கியது.

இதையும் படிங்க: லியோ ஆடியோ லாஞ்சே வேண்டாம்னு சொன்ன விஜய்?.. எல்லாத்துக்கும் காரணம் ஏ.ஆர். ரஹ்மான் தானா?..

இங்கு தான் ஒரு ட்விஸ்ட்டு இந்த படமும் கோலிவுட் ஹிட் படத்தின் காப்பி தான். விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தின் சாயலாகவே தெறி இருந்தது குறிப்பிடத்தக்கது. போச்சுடா இதுவும் காப்பி தான். ஆனா படம் ஹிட்டு.

இந்த முறையும் அட்லீயை நம்பி அடுத்து மெர்சல், பிகில் என தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு கொடுத்தார். மெர்சல் அபூர்வ சகோதரர்கள் சாயலிலும், பிகில் அப்பட்டமான ஹாலிவுட்டின் காட்சிகளை கொண்டும் உருவாக்கப்பட்டு அதுவும் வசூல் படைத்தது.

இதையும் படிங்க: ஒத்த டவலை சுத்திக்கிட்டு நிக்கும் பொன்னியின் செல்வன் நடிகை!.. ஜூம் பண்ணி தூக்கத்தை கெடுத்த பாய்ஸ்!..

சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் அப்பட்டமாக பல தமிழ் படங்களில் இருந்து வகையாக சுட்டு எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட வசூல் 600 கோடியை தாண்டினாலும் இதற்கும் விமர்சன ரீதியாக மோசமான படம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் அட்லீயிடம் படங்களை காப்பி அடிக்கிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்தவர் இதுவரை நான் படங்களை காப்பி அடித்தேன் என என் மீது வழக்கு சிலர் போட்டு இருக்கின்றனர். எதிலும் நான் தவறு செய்ததாக கூறவில்லை. படத்துக்கு க்ரெடிட் கொடுக்க வேண்டும் என்றால் 2000 படங்களுக்கு கொடுக்க வேண்டும். என் கண்டெண்ட் மீது நம்பிக்கை இருக்கிறது. அது என்னுடையது தான். கிரெடிட் கொடுப்பது நம்பிக்கை இல்லாமல் செய்வது போல எனக் கூறினார். இருக்கு ஆனா இல்ல!

Related Articles
Next Story
Share it