கிள்ளி கொடுப்பாங்க.. ஆனா மொத்தமா கொடுத்துட்டாங்களே.. சன் பிக்சர்ஸை காலடியில் விழ வைத்த அட்லீ
Director Atlee: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ அந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து விஜயை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தார். அதுவும் பக்கா கமெர்ஷியல் படமாக அமைய அட்லீயை தமிழ் திரையுலக ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
அட்லீ விஜய் கூட்டணியையும் மக்கள் மேலும் மேலும் விரும்பினார்கள். அதுமட்டுமில்லாமல் விஜயை அட்லீ அண்ணா என அழைப்பதும் அட்லீயை விஜய் தம்பி என அழைப்பதும் ரசிக்கும் படியாக இருந்தது. விஜயை இயக்குவதற்காகவே பிறந்தவர் அட்லீ என்பதை போல் ஒரு பிம்பத்தை கோலிவுட்டில் உருவாக்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் அந்த படமா? ஓ அதான் அப்படி செஞ்சாரா?
இப்போது கூட அரசியலுக்கு போவதற்கு முன் விஜய் கடைசியாக நடிக்கும் படமாக தளபதி 69 படம் அமைய இருக்கிறது. அந்தப் படத்தையும் அட்லீ இயக்கினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அட்லீ தெலுங்கில் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
அதன் காரணமாகவே தளபதி 69 திரைப்படத்தை அட்லீ இயக்க மாட்டார் என்று தெரிகிறது. இதற்கிடையில் அட்லீ அல்லு அர்ஜூன் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. ஜவான் படத்தின் போது வெறும் சம்பளத்தை மட்டுமே பெற்றுக் கொண்டார். ஆனால் படத்தின் வசூல் 1000 கோடியை தாண்டிய போது ப்ராஃபிட் ஷேர் வாங்கியிருக்கலாமே என்று புலம்பினாராம்.
இதையும் படிங்க: 36 முறை மோதிய விஜயகாந்த் – சத்யராஜ் படங்கள் : ஜெயித்தது புரட்சிக்கலைஞரா? புரட்சித்தமிழனா?..
இப்போது அந்த டெக்னிக்கை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பயன்படுத்த இருக்கிறாராம். அதாவது சம்பளமாக ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்ற பிறகு படத்தின் வசூல் 500 கோடியை தாண்டினால ஒரு குறிப்பிட்ட ப்ராஃபிட் ஷேர் தனக்கு தரும்படி கேட்டிருக்கிறாராம்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தர அனுமதி அளித்துவிட்டதாம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரைக்கும் சம்பளத்தை கொடுப்பதில் கறார் காட்ட கூடிய நிறுவனம். அள்ளிக் கொடுப்பதை விட கிள்ளித்தான் கொடுப்பார்களாம். அப்படி இருக்கும் போது எப்படி அட்லீ சொன்னதும் சம்மதம் தெரிவித்தார்கள் என கோடம்பாக்கத்தில் புலம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: அங்க ரஜினி படம் ஒடவே ஒடாது! இழந்த மார்கெட்டை அந்த ஒரு படத்தின் மூலம் மீட்ட சூப்பர்ஸ்டார்