அம்பானி வீட்டில் அட்லீக்கு இவ்ளோ பெரிய மரியாதையா? ‘ஜவான்’ தந்த பரிசா? மனைவியுடன் கலர்ஃபுல்லான லுக்

by Rohini |
atlee
X

atlee

Atlee-Ambani: தமிழ் திரையுலகில் அட்லீ ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார். அதுவும் ஜவான் பட வெற்றி அவரை சர்வதேச தரத்தில் கொண்டு சென்றிருக்கிறது. 4 படங்களை மட்டுமெ எடுத்த அட்லீ ஐந்தாவது படமாக ஜவான் படத்தை இயக்கினார். பாதாளத்தில் மூழ்கி கிடந்த பாலிவுட்டை தன்னுடைய பதான் படத்தின் மூலம் மீட்டெடுத்தார் ஷாரூக்கான்.

பதான் பட வெற்றிக்கு பிறகு ஷாரூக்கான் நடித்த படமாக ஜவான் படம் அமைந்தது. அட்லீயுடன் முதன் முறையாக கூட்டணி அமைத்துக் கொண்ட ஷாரூக்கான் தன் சொந்த தயாரிப்பிலேயே ஜவான் படத்தை தயாரித்தார்.

atlee1

atlee1

இதையும் படிங்க: நான் தரேன்… சரோஜாதேவிக்காக சூர்யா செய்த செயல்.. முந்திக்கொண்டு முன்னே வந்த உதயநிதி!

ஜவான் படத்தின் மீது பாலிவுட் மட்டுமில்லாமல் கோலிவுட்டும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. ஒரு வேளை ஜவான் படம் வெற்றியடைந்து விட்டால் தமிழ் சினிமாவிலும் அட்லீயின் தரம் உயர்ந்து விடும். சம்பளமும் கோடிக் கணக்கில் உயர்ந்து விடும்.

அனைவரும் எதிர்பார்த்ததை போலவே ஜவான் மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்றது. 500 கோடிக்கும் மேலாக இன்னும் வசூல் செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தை ஆஸ்கர் வரை கொண்டு செல்ல அட்லீ விரும்புவதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: நான் தப்புனா பாரதியாரும் தப்புதான்… பாடல் வரியை மாற்ற முடியாது… கறாராய் சொன்ன வாலி…

இதை பற்றி ஷாரூக்கானிடம் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதே சமயம் மீண்டும் அட்லீயுடன் ஷாரூக்கான் இணைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி உருவாகும் படத்தில் கமலை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ஜவான் படம் ரிலீஸ் ஆனாலும் அட்லீ தம்பதிகள் இன்னும் மும்பையிலேயே இருப்பதாக தெரிகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை மிகவும் கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார்கள். அதுவும் மும்பை டானாக இருக்கும் தொழிலதிபர் அம்பானி விட்டில் அட்லீக்கு அழைப்பு வர விழாவில் தன் காதல் மனைவியுடன் கலர்ஃபுல்லான ஆடையில் சென்று கலக்கியிருக்கிறார் அட்லீ.

இதையும் படிங்க: அந்த பொண்ணுக்கு இதுதான் உசுரு… சத்தமே வராது.. விஜய் ஆண்டனி மகள் மீராவின் மறுப்பக்கம்… ஷாக்கான தகவல்கள்

Next Story