இருக்கு ஆனா இல்ல! விஜய் மேல இவ்ளோ பைத்தியமா? நடிகையிடம் ஆசையை தூண்டி வேடிக்கை பார்த்த அட்லீ

Atlee Over Attitude: தமிழ் சினிமாவில் ஒரு உடன் பிறவா சகோதரர்களாகவே பார்க்கப்படுகிறார்கள் விஜயும் அட்லீயும். இதை பற்றி விஜய் எதுவும் சொல்லவில்லை என்றாலும் அண்ணனுக்காக தன் உயிரையே கொடுப்பேன் என்பது மாதிரியான ஆட்டியூட்களை காட்டி வருகிறார் அட்லீ. எந்த மேடையானாலும் என் அண்ணன், என் தளபதி என விஜய் புராணத்தையே பாடிக் கொண்டு வருகிறார்.

விஜயை வைத்து தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தவர் சும்ம இருப்பாரா என்ன? கொஞ்சம் ஆடத்தான் செய்வார். இப்போது அட்லீ ஹிந்தியில் சாருக்கானை வைத்து ஜவான் படத்தை எடுத்து ஒரு மாஸ் செய்துள்ளார். படமும் ரிலீஸ் ஆகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்திருக்கிறது.

இதையும் படிங்க: அடுத்த ஆதி குணசேகரனுக்கு இவர்கிட்டதான் பேசுறாங்களாம்!.. அப்போ இனி சீரியல் தீயாய் இருக்குமே!.

வசூலிலும் வேட்டையை நடத்தியிருக்கிறது. இந்த நிலையில் ஜவான் படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார். ஜவான் படத்தில் நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி , யோகிபாபு போன்ற பால் நடிகர்கள் நடித்திருந்தனர்.

படத்தில் விஜயும் கேமியோ ரோலில் வருவதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் கேமியோ ரோல் படத்தில் இல்லை. மேலும் படக்குழுவும் அந்த சந்தேகத்தில் தான் இருந்தார்களாம். விஜய் கேமியோ ரோல் வைரலானதால் ஒரு வேளை விஜய் நடிப்பாரோ என்றுதான் ஜவான் பட நடிகர்களும் நினைத்தார்களாம்.

இதையும் படிங்க: தலைவர் யார்னு காட்டிட்டாரு! நான் யாருனு காட்டுறேன் – ரஹ்மானை மிஞ்சும் சந்தோஷ் நாராயணன்

ஆனால் அட்லீ யாரிடமும் இதைப் பற்றி ஒன்றும் பேசவில்லையாம். நடிகை பிரியாமணி விஜய் நடிக்கப் போகிறாரா? அவருடன் ஒரு சீனிலாவது நான் நடிக்க வேண்டும். அவர் நடிப்பது உண்மையா? என்று அட்லீயிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அட்லீயோ சிரித்தப்படியே மழுப்பி விட்டாராம்.

இருந்தாலும் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தாராம் பிரியாமணி. எப்படியோ ஒட்டுமொத்த சூட்டிங்கும் முடிந்த நிலையில் பேட்ச் வேலைகள் மட்டும் இருந்ததாம். அப்போது கூட பிரியாமணி யாருக்கும் தெரியாமல் கூட விஜய் நடிப்பாரோ? என்று நினைத்து மீண்டும் அட்லீயிடம் கேட்டாராம். ஆனால் அப்போது கூட அட்லீ சொல்லவே இல்லையாம்.

இதையும் படிங்க: ஜெயிலர் ஹிட்டுக்கு பின் லியோவில் நடந்த மாற்றம்!.. வெறித்தனமா வேலை பாக்கும் லோகேஷ் கனகராஜ்..

படம் வெளியான பிறகு தான் இந்தப் படத்தில் விஜய் இல்லை என்று பிரியாமணிக்கு தெரியவந்தததாம். வெட்கத்தை விட்டு தன் ஆசையை கேட்டு பல்பு வாங்கியது தான் மிச்சம் என பிரியாமணியின் நிலைமை மாறியிருக்கிறது.

 

Related Articles

Next Story