More
Categories: Cinema News latest news

அடுத்து பண்ண போறத பாருங்கடா!.. விஜய் இல்லனா வேற நடிகர்!.. கொக்கரிக்கும் அட்லீ!..

Director atlee: தமிழில் பல பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய ஷங்கரின் உதவியாளர்தான் இந்த அட்லி. குருவை போலவே சொன்ன பட்ஜெட்டை விட அதிக செலவு வைத்து தயாரிப்பாளர்களின் வயிற்றில் புளியை கரைப்பார். 6 மாதத்தில் முடித்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு ஒரு வருசம் படம் எடுப்பார்.

சொந்தமாக கதை எதையும் யோசிக்காமல் தமிழில் 30 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி திரைப்படமாக எடுப்பார். ஆனால், அதில் போன்ற நடிகரை நடிக்க வைத்து பூசி மொழுகி ஒரு மாதிரி ‘அட படம் நன்றாகத்தான் இருக்கிறது’ என சொல்ல வைப்பதுதான் அட்லியின் திறமை.

Advertising
Advertising

இதையும் படிங்க: படுத்தே விட்ட ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாக்ஸ் ஆபிஸ்!.. பொங்கலுக்கும் இதே நிலைமை தானா?..

மௌன ராகத்தை வைத்து ராஜா ராணி, சத்ரியனை வைத்து தெறி, அபூர்வ சகோதரர்களை வைத்து மெர்சல், ஷாருக்கான் நடித்த சக்தே இண்டிடா மற்றும் சில ஹாலிவுட் பட காட்சிகளை வைத்து பிகில் ஆகிய படங்களை எடுத்தார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக பட்ஜெட்டில் படமெடுப்பவரும், அதிக நாட்கள் படமெடுப்பவரும் பெரிய இயக்குனராக பார்க்கப்படுகிறார்கள். அப்படித்தான் அட்லியும் பெரிய இயக்குனர் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார்.

பிகில் முடித்ததும் ஷாருக்கானிடமிருந்து அழைப்பு வர மும்பை சென்று 3 வருடங்களுக்கும் மேல் தங்கியிருந்து ஜவான் படத்தை இயக்கினார். இதில், 23 தமிழ் படங்களின் கலவை இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனாலும், வட இந்தியர்களுக்கு அந்த காட்சிகள் புதிது என்பதால் ரூ.1000 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துவிட்டது.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க போறான்னு ஒப்பாரி வச்ச ரஜினி… நடிகவேள் பட்டத்தை ஏன் தூக்கி கொடுக்கிறாரு?

அடுத்து விஜயை வைத்தோ அல்லது ஷாருக்கான் – கமல் கூட்டணியில் ஒரு படமோ அவர் இயக்க போகிறார் என செய்திகள் கசிந்து வருகிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அட்லீ ‘என் அடுத்த படத்தின் கதையை ஒரு ஹாலிவுட் எழுத்தாளருடன் இணைந்து உருவாக்க போகிறேன். விஜய் அல்லது ஷாருக்கான் அதில் நடிக்க விரும்பினால் அவர்களை வைத்து எடுப்பேன். இல்லையேல், மற்ற ஹீரோக்களிடம் செல்வேன்’.

கடந்த 30 வருடங்களில் ரசிகர்கள் பார்க்காத ஒன்றை அவர்களுக்கு இந்த படத்தில் காட்டுவேன். வழக்கமாக என் படத்தில் வரும் கதாநாயகி இறந்து போவது, பிளாஷ்பேக் காட்சிகள் என எதுவும் அதில் இருக்காது. நான் காப்பி அடிக்கிறேன் என்கிற புகார் பல வருடங்களாக இருக்கிறது. அதை நான் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை’ என அவர் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் மீட்டிங்கில் அட்லியை பங்கமாக கலாய்த்த அஜித்!.. அட ஒரே பப்பி ஷேமா போச்சே!..

Published by
சிவா

Recent Posts