அண்ணனுக்காக சூப்பர்ஸ்டார் படத்தையே ஸ்டாப் பண்ண அட்லீ!… டைட்டில் தாங்க மாஸ்…

Published on: March 11, 2024
---Advertisement---

Atlee: நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி69 திரைப்படத்தின் டைரக்டர் மற்றும் படத்தின் டைட்டில் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் லீக்காகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் செம சந்தோஷத்தில் உள்ளனர்.

தற்போது விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கிறது. அதை தொடர்ந்து படத்தின் விஎஃப்எக்ஸ் பணிக்காக வெங்கட் பிரபு லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல இருக்கிறாராம். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் குறித்தும் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இரண்டு பெயரை கொடுத்த சிவாஜி ராவ்… மறுத்த கே.பாலசந்தர்.. ரஜினிகாந்த் உருவானதன் பின்னணி?

இப்படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் தளபதி69 படத்தினை யார் இயக்குவார் என்ற சர்ச்சை தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் கார்த்திக் சுப்புராஜ் தொடங்கி ஆர்.ஜே.பாலாஜி வரை இடம் பிடித்துவிட்டனர்.

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு காரணம் சொல்லப்பட்டு வருகிறது. சிலர் தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இப்படத்தினை இயக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு கூறுகையில் விஜயின் தளபதி69 படத்தினை அட்லீ தான் இயக்குவார் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாதி படம் எடுத்தபின் குப்பையில் போடப்பட்ட சிவாஜி படம்!. ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!..

விஜயின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ  ஏற்கனவே விஜயின் மூன்று படத்தினை இயக்கி விட்டார். கடைசி படமாக இருக்கலாம் எனச் சொல்லப்படும் தளபதி69 படத்தினை அட்லீக்கே விஜய் கொடுக்கலாம் எனவும் தெரிவித்து இருக்கிறார். அரசியல் சார்ந்த படமாக இருக்க வேண்டும் என்பது விஜயின் நோக்கமாக இருக்கிறது.

அதை சரியாக அட்லீயால் தான் செய்ய முடியும் என விஜய் தரப்பும் நம்புகிறதாம். இதனாலே தெலுங்கில் அல்லு அர்ஜூனை வைத்து அட்லீ இயக்க இருந்த திரைப்படத்தினை தற்போதைக்கு நிறுத்தி வைத்து இருப்பதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கிறது.

அதுமட்டுமல்லாமல் விஜயின் 69வது படத்தினை அட்லீ இயக்கும் நிலையில் அப்படத்துக்கு ஆளப்போறான் தமிழன் எனவும் பெயர் வைக்கலாம் என ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.