அட்லீ முகத்திற்கு முன்பே அசிங்கப்படுத்தி அனுப்பிய புஷ்பா.! பேராசை என்றுமே பெருநஷ்டம் தான்.!
ராஜா ராணி எனும் சூப்பர் ஹிட் காதல் திரைப்படம் மூலம் நல்ல இயக்குனராக அறிமுகமாகி, அதன் பிறகு, தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கி தளபதி விஜயின் தற்போதைய உச்ச மார்க்கெட் நிலவரத்திற்கு முக்கிய நபராய் இருந்தவர் இயக்குனர் அட்லீ.
அடுத்தடுத்த பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின்னர்ட் தற்போது பாலிவுட் வரை சென்று அங்கு, ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் அட்லீ. அந்த திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதனை அடுத்து, எந்த பெரிய ஹீரோவை அட்லீ இயக்க இருக்கிறார் என்ற தகவலை அறிய பலரும் ஆர்வமாய் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் , புஷ்பா படம் மூலம் பான் இந்தியா நடிகராக மாறிய அல்லு அர்ஜுனிடம் கதை கூற சென்றாராம் இயக்குனர் அட்லீ.
இதையும் படியுங்களேன் - இறந்துபோன தயாரிப்பாளருக்கு விஷால் செய்தது அநியாயம்.! வேதனையின் உச்சத்தில் குடும்பத்தார்.!
கதை கூறி விட்டு, எடுத்தவுடன் தனது சம்பளம் 35 கோடி என கூறிவிட்டாராம். இதனை கேட்டு அதிர்ந்து போன அல்லு அர்ஜுன். அவரிடமே இல்லை சார் இது சரிப்பட்டு வராது என கூறிவிட்டாராம். இந்த தகவல் அறிந்த கோலிவுட் அதிர்ச்சியடைந்துள்ளது.