Director Atlee: விஜயின் ஆஸ்தான இயக்குனர் என்றே சொல்லலாம் அட்லீயை. விஜயை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை ஹிட் கொடுத்ததன் மூலம் அட்லீ என்றாலே விஜய். விஜய் என்றாலே அட்லீ என்ற அளவுக்கு கோலிவுட்டில் ஒரு டாக் போய்க் கொண்டிருந்தது. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
ராஜா ராணி படத்தின் வெற்றி அடுத்ததாக விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பை அட்லீக்கு கொடுத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அட்லீ. அதிலிருந்து தொடர்ந்து மூன்று படங்களை விஜய்க்காக கொடுத்து ரசிகர்கள் மத்தியிலும் குறிப்பாக விஜய் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு நிலையான இடத்தை அட்லீ பெற்றார்.
இதையும் படிங்க: கமலின் அந்த ஹிட் பாட்டு தான் கில்லி ஷா லா லா… உண்மையை சொன்ன கபிலன்!…
அதன் பிறகு மீண்டும் தமிழ் படங்களில் தரமான படங்களை கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் பாலிவுட் பக்கம் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்து ஹிந்தியிலும் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.
அந்தப் படம் ஆயிரம் கோடி வசூலைத் தொட்டு பாலிவுட் சினிமாவில் அட்லீயை ஒரு மிகப்பெரிய இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஜவான் படத்திற்கு பிறகு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். அட்லீ மும்பையில் நடக்கும் திரைப்பட விழா மற்றும் இதர விழாக்களில் தனது காதல் மனைவியுடன் கலந்து கொள்ளும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: ஒரே நாளில் ரோகிணியை இப்படி கொடுமைப்படுத்தும் விஜயா… மீனா எஸ்கேப் தான்!…
அவருடைய மனைவி பிரியா அட்லீ ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களிலும் நடித்தவர் இந்த நிலையில் அட்லீ தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் தன்னுடைய குழந்தையை வைத்திருக்கும் பிரியா அட்லீ குழந்தை பிறந்த பிறகு அவருடைய சுதந்திரம் பறிபோய் விட்டதாக ஒரு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C6LWqawJBnf/?igsh=MWNpdjBxbGZkcThrYQ==
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…