ஷாருக்கான நம்பி மோசம் போன அட்லீ... மூணு வருஷம் வீணாப்போச்சே

by Manikandan |   ( Updated:2022-03-25 12:00:48  )
ஷாருக்கான நம்பி மோசம் போன அட்லீ... மூணு வருஷம் வீணாப்போச்சே
X

ராஜா ராணி எனும் சூப்பர் ஹிட்டோடு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் இயக்குனர் அட்லீ. அடுத்தடுத்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் , பிகில் என மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டையும் பாலிவுட் வரை கொண்டு சென்றார் அட்லீ

பிகில் படத்தை அடுத்து, அட்லீ எந்த பெரிய ஹீரோவை இயக்க உள்ளார் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அட்லீ அடுத்ததாக ஷாருக்கானை இயக்க உள்ளார் என கோலிவுட்டை அதிரவைத்தார் அட்லீ.

atlee

கிட்டத்தட்ட 2 வருடங்களாக கதை கேட்டு வந்த ஷாருக், அட்லீயின் கதையில் இம்ப்ரெஸ் ஆகி அவருடைய இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார். அதனை ஸாருக்கே தயாரிக்கவும் செய்தார். அதற்கான கதை விவாதம் மும்பையில் நடைபெற்றது. கூடவே ஷூட்டிங்கும் நடைபெற்று வந்தது.

இதற்கிடையில், ஷாருக்கான் - அட்லீ திரைப்படம் டிராப் ஆனதாக செய்திகள் வெளியாகி வருகிறது. கிட்டத்தட்ட இந்த படத்திற்காக 3 வருடங்கள் அட்லீ உழைத்துள்ளார். ஆனால், கதையில் ஷாருக்கானுக்கு திருப்தி இல்லாததாக கூறப்படுகிறது. கதை விவாதத்திற்கு அதிக செலவு ஆனதாம்.

இதையும் படியுங்களேன் - நிஜத்திலும் அஜித் காதல் மன்னன்தான்பா!... லிஸ்ட்ல எத்தனை நடிகைங்க தெரியுமா?...

கொரோனா காரணமாக கிட்டத்தட்ட 2 வருடம் ஷூட்டிங் நடக்காமலும் இருந்து வந்துள்ளது அத்தனையும் ஒரு காரணமாக கொண்டு அட்லீ படம் டிராப் என கூறப்படுகிறது. இருந்தாலும், சில ஊடகங்கள், ஏப்ரல் மாதம் அடுத்தகட்ட ஷூட்டிங் ஆரம்பிக்கும் என கூறி வருகிறார்கள்.

ஆனால், தற்போது வரையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருப்பது இப்படம் டிராப் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கிறது என்கிறது கோடம்பாக்கம்.

Next Story