More
Categories: Cinema News latest news

அட்லீயோட அடுத்த பட டிஸ்கஷன்!.. எந்த ஹீரோ கூட நடத்துறாரு பாருங்க!.. செம வைரலாகுது!..

இயக்குநர் அட்லீ இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கக் கூடிய மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியுள்ளார். கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸில் ராஜமெளலி படங்களுக்கே டஃப் கொடுத்தது.

குருநாதரான ஷங்கரே இன்னமும் ஒரு 1000 கோடி ரூபாய் வசூல் படத்தை கூட கொடுக்காத நிலையில், இயக்குநர் அட்லீ 1100 கோடி வசூல் படத்தை ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதியை வைத்து கொடுத்து பெரிய சம்பவத்தை செய்துள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: எந்த ஆங்கிளில் பார்த்தாலும் செம ஹாட்டு!… சிக்குன்னு காட்டி இளசுகளை இழுக்கும் அனுபமா…

அட்லீ அடுத்ததாக எந்த ஹீரோவை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி ஒரு பக்கம் எழுந்துள்ளது. தளபதி 69வது படத்தை அவர் இயக்கினால் நல்லா இருக்கும் என்கின்றனர். மேலும், அல்லு அர்ஜுன் படம் தான் அடுத்தது என்றும் புஷ்பா 2வை முடித்து விட்டு அட்லீ படத்தில் தான் அல்லு அர்ஜுன் இணையப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில், தனது டீமுடன் தனது அடுத்த படத்திற்கான டிஸ்கஷனை ஆரம்பித்து விட்டார் அட்லீ. கூடிய விரைவில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அவர் வெளியிடுவார் என தெரிகிறது.

இதையும் படிங்க: ஹோட்டலில் தாலி கட்ட சொன்ன நடிகை லட்சுமி!.. மிரட்சியில் நின்ற சீரியல் நடிகர்…

புதிதாக தற்போது அட்லீயின் டிஸ்கஷன் க்ரூப்பில் ஒரு குட்டி ஹீரோ இணைந்துள்ளார். அவர் வேறு யாருமே இல்லை இயக்குநர் அட்லீயின் க்யூட்டான மகன் மீர் தான். எதிர்காலாத்தில் ஹீரோவாகப் போகிறாரா? அல்லது அப்பாவை போல இயக்குநர் ஆகப் போகிறாரோ தெரியவில்லை. ஆனால், ஒரு வயதிலேயே சிம்பு போல சினிமாவில் என்ட்ரி கொடுத்து விட்டார்.

Published by
Saranya M

Recent Posts