Atlee rajini: தமிழில் பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த ஷங்கரின் உதவியாளர்தான் இந்த அட்லி. ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் உள்ளிட்ட சில படங்களில் அட்லீ உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். ராஜா ராணி படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படமே வெற்றி. நண்பன் படத்தில் வேலை செய்த விஜய்க்கு பழக்கம் என்பதாலும், ராஜா ராணி படம் விஜய்க்கு பிடித்திருந்ததாலும் அட்லியின் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்தார். அப்படி உருவான தெறி திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. விஜய்க்கும் அட்லி திரையில் தன்னை காட்டு விதமும் பிடித்துப்போனது.
இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் மீட்டிங்கில் அட்லியை பங்கமாக கலாய்த்த அஜித்!.. அட ஒரே பப்பி ஷேமா போச்சே!..
எனவே, தொடர்ந்து அட்லியின் இயக்கத்தில் மெர்சல், பிகில் ஆகிய படங்களில் நடித்தார். அட்லீ ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி படமாக எடுக்கிறார் என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும் அதை அவர் கண்டுகொள்வதில்லை. அவரின் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கிறதோ இல்லையோ அதிக சம்பளம் வாங்கும் பெரிய இயக்குனராக மாறிவிட்டார்.
பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்துவிட்டது. எனவே, பாலிவுட்டிலும் அட்லிக்கு வாய்ப்புகள் வருகிறது. ஒருபக்கம், அடுத்து அவர் விஜயை இயக்குவார், ஷாருக்கான் – கமல் கூட்டணியில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பிருக்கிறது என செய்திகள் வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க: அடுத்து பண்ண போறத பாருங்கடா!.. விஜய் இல்லனா வேற நடிகர்!.. கொக்கரிக்கும் அட்லீ!..
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அட்லியிடம் ரஜினி இயக்கும் ஆசை இருக்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அட்லீ ‘ கண்டிப்பாக அவருடன் ஒரு படத்தில் இணைவேன். அதற்கு காலமும், நேரமும் ஒத்துவர வேண்டும். அவரும் தயாராகத்தான் இருக்கிறார். ஏற்கனவே சில கதைகளை அவரிடம் சொல்லி இருக்கிறேன்.
ஆனால், பாட்ஷா படத்தை விட ஒரு சிறந்த படத்தை அவருக்கு கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. எனவே, அதற்கு நேரம் தேவை. நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். எந்திரம் படம் உருவானபோது 300 நாட்கள் அவருடன் வேலை செய்தேன்’ என அட்லி கூறினார்.
இதையும் படிங்க: காதலை சொல்லி கலாய் வாங்கிய அட்லீ… கல்யாணத்துல கூட தளபதி ஸ்டைல்தான் போல!…