அய்யா அட்லீ அந்த படத்தை சீக்கிரம் பண்ணுய்யா!.. விஜய்யுடன் இணையும் சூப்பர் ஸ்டார்.. என்ன சொன்னார் தெரியுமா?..

by Saranya M |   ( Updated:2023-09-19 10:31:55  )
அய்யா அட்லீ அந்த படத்தை சீக்கிரம் பண்ணுய்யா!.. விஜய்யுடன் இணையும் சூப்பர் ஸ்டார்.. என்ன சொன்னார் தெரியுமா?..
X

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இதுவரை சுமார் 890 கோடி ரூபாயை வசூல் ஈட்டிய நிலையில், அட்லி அடுத்ததாக எந்த ஹீரோவை வைத்து படத்தை இயக்கப் போகிறார் என்கிற கேள்விதான் இந்தியா முழுவதுமே ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.

அல்லு அர்ஜுன் வைத்து ஒரு படம் பண்ணப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இரண்டு பெரிய ஸ்டார்களை வைத்து பான் வேர்ல்ட் சம்பவத்தை அட்லி பண்ண போகிறார் என்பது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: கட்டுன புருஷன் அங்க கம்பி எண்ணுறான்.. உனக்கு போட்டோஷூட் கேக்குதோ!.. மகாலட்சுமியை விளாசும் ஃபேன்ஸ்!..

ஷாருக்கானின் ஜவான் படத்திலேயே நடிகர் விஜய் கேமியோ ரோலில் வருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசிவரை நடிகர் விஜய் அந்த படத்தில் ஒரு சீன் கூட நடிக்காதது அறிந்த சினிமா ரசிகர்கள் ஜவான் படத்தை ஹிந்தி படமாக ஒதுக்கி தள்ளிவிட்டனர்.

சமீபத்தில், அட்லி கொடுத்த பேட்டி ஒன்றில், அட்லியின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் விதமாக நடிகர் விஜய் தானும் ஷாருக்கான் படத்தில் நடிக்கிறேன் என்றும் அதற்கான ஸ்கிரிப்ட் உன்னிடம் உள்ளதா? என்று கேட்டார்.

இதையும் படிங்க: விஜய்யோட ஹீரோயினை மட்டுமில்லை!… வில்லனையும் ஆட்டைய போட்ட அஜித்!.. லேட்டஸ்ட் போட்டோவ பாருங்க!..

என் அருகே ஷாருக்கானும் இருந்தார். அவர் உடனடியாக எங்கள் இருவருக்கான கதையை வைத்திருக்கிறாயா என்றும் ரியலாவே கதை இருந்தால் சொல்லு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறோம் என்றார்.

இப்படி இவர்கள் இருவரும் என்னோட பிறந்தநாளுக்காக பேசுறாங்கன்னு சும்மா இருந்துட்டேன்.. அதன் பின்னர், அடுத்த நாளே தளபதிக்கிட்ட இருந்து மெசேஜ் வருது, எப்போப்பா ஸ்க்ரிப்ட் ரெடியாகும்னு, இப்படி இருவருமே ஒன்றாக ஒரு படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுறாங்க என்பதை அப்போ தான் ரியலைஸ் பண்ணேன்.. ரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்க்குறாங்க, ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒரு கதை பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப சீக்கிரமே அந்த படம் வரும் என அட்லி பேசியதை கேட்ட விஜய் மற்றும் ஷாருக்கான் ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பியாகி உள்ளனர்.

Next Story