குருநாதர் ஷங்கரையே இட்லியா தூக்கி சாப்பிட்ட அட்லீ!.. தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே இப்போ இவர் தான் டாப்!
Jawan Director Atlee: தமிழ் சினிமா இயக்குனர்கள் இடையே தற்போது இயக்குனர் அட்லி தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் சங்கர் இயக்கிய 2.0 திரைப்படம் அதிகபட்சமாக 800 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஷங்கருக்கு பிறகு வந்த இயக்குனர் ராஜமவுலி, கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் உள்ளிட்டோர் ஆயிரம் கோடி வசூல் சாதனையை படைத்துள்ளனர்.
இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமா இயக்குனரும் ஆயிரம் கோடி வசூல் சாதனையை அடையாத நிலையில், முதன்முறையாக இயக்குனர் அட்லி அந்த மேஜிக்கை நடத்தப் போகிறார் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதையும் படிங்க: கடைசியில பிஸ்கோத்து!.. ஜவான் படத்தில் விஜய் வருவாருன்னு பார்த்தா.. யாரு கேமியோ தெரியுமா?..
எனது குருநாதர் ஷங்கரையே அட்லீ தூக்கி சாப்பிட போகிறார் ஏதாவது சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியான நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளது.
நிலையில் கண்டிப்பாக அந்த திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை அசால்ட்டாக தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் அடித்துக் கூறி வருகின்றனர். அட்வான்ஸ் புக்கிங் இல்லையே இயக்கிய ஜவான் திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை பெற்றதாகவும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் முதல் நாளில் 100 கோடி ரூபாயை ஜவான் திரைப்படம் கடக்கும் என்பது உறுதி என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஹெச்.வினோத் படத்துக்காக மீண்டும் துப்பாக்கி எடுக்கும் கமல்ஹாசன்!.. மெர்சலாக்கும் டிரெய்னிங் வீடியோ…
சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், அடுத்த மாதம் ரிலீசாக உள்ள தளபதி விஜயின் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டினால் அட்லீக்கு பின்னர் ஆயிரம் கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறுவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் அத்தனை பெரிய வசூலை லோகேஷ் கனகராஜ் நியூ படத்தின் மூலம் பெறத் தவறினால் கண்டிப்பாக கமல்ஹாசனை வைத்து சங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தின் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் தமிழ் சினிமாவுக்கு சாத்தியம் ஆகும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் அதற்கு முன்பாகவே இயக்குனர் அட்லி அந்த சாதனையை படைத்து விடுவாரா என்கிற எதிர்பார்க்கும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அட்லி இயக்கும் அடுத்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு களவும் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.