கடைசியில பிஸ்கோத்து!.. ஜவான் படத்தில் விஜய் வருவாருன்னு பார்த்தா.. யாரு கேமியோ தெரியுமா?..
ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தில் கேமியோ ரோலில் தளபதி விஜய் வருவார் என கடைசிவரை விஜய் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் கடைசியில் மாமா பிஸ்கோத்து என்பதுபோல ஒரு கேமியோவை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
ஷாருக்கான் தயாரித்து நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் தியேட்டர்களில் சிறுவர்கள் முதல் தாத்தா பாட்டி வரை என அனைவரும் எழுந்து நின்று ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: பாலிவுட்டில் பலித்ததா அட்லியின் காப்பி மேஜிக்!.. ஷாருக்கானின் ஜவான் படம் எப்படி இருக்கு?..
இதுவரை பாலிவுட் பார்க்காத அளவுக்கு தியேட்டர் செலிபரேஷனை ஷாருக்கான் ரசிகர்கள் மரண மாஸாக கொண்டாடி வருகின்றனர். ஜவான் திரைப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் நான்கு ஸ்டார் ரேட்டிங் மற்றும் 4.5 ஸ்டார் ரேட்டிங்குகள் கிடைத்து வருகின்றன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படத்தையே அட்லி இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் ஓரங்கட்டி விடும் என அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோபத்தில் எட்டி உதைத்த அஜித்! ‘நான் கடவுள்’ படத்தின் போது ஏற்பட்ட மோதல் – இதுதான் நடந்ததா?
திடீரென நேற்று, நடிகர் விஜய்க்கு பதிலாக டோலிவுட் நடிகர் மகேஷ்பாபு ஜவான் படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், ஒருவேளை மகேஷ்பாபு கேமியோ ரோலில் நடித்துள்ளாரா என ஷாருக்கான் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற விட்டிருந்தனர்.
ஆனால் பாலிவுட் படங்களில் நடிக்க மாட்டேன் என்கிற குறிக்கோளுடன் உள்ள மகேஷ் பாபு எப்படி கேமியோ ரோலில் நடித்திருப்பார் கேள்வியும் எழுந்திருந்தது. மேலும் கடைசி நேரத்தில் கண்டிப்பாக விஜய் இந்த படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ ரோலில் வருவார் என்றும் தளபதி ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: ஜூம் பண்ணி பாத்தா கிறுகிறுக்க வைக்குது!.. மொத்த அழகையும் காட்டும் நித்தி அகர்வால்!..
நடிகர் விஜய் ஜவான் படத்தில் நடிக்கவில்லை என்கிற உறுதியான தகவல்களும் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஜவான் திரைப்படத்தில் யாரு தாபா கேமியோ ரோலில் வந்தார் என்கிற கேள்விக்கு, படத்தின் இயக்குனர் அட்லி பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடலில் விஜயுடன் தோன்றி நடனமாடியது போல இந்தப் படத்திலும் ஷாருக்கானுடன் நடனமாடி உள்ளார்.
தளபதி விஜய் ஷாருக்கானுடன் அந்த சீனில் டான்ஸ் ஆடி இருந்தால் எப்படி மாஸாக இருந்திருக்கும் அதற்கு பதிலாக கடைசியில் இயக்குனர் அட்லி மட்டுமே இந்த படத்தில் கேமியோ என்பதை அறிந்த ஷாருக்கான் ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகியுள்ளனர்,
COPYRIGHT 2024
Powered By Blinkcms