
Cinema News
கோபத்தில் எட்டி உதைத்த அஜித்! ‘நான் கடவுள்’ படத்தின் போது ஏற்பட்ட மோதல் – இதுதான் நடந்ததா?
தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். விடாமுயற்சி படத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் அஜித். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படம்தான் விடாமுயற்சி. ஒரு நீண்ட இழுபறிக்கு பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
அதுவும் முழு படப்பிடிப்பையும் துபாயில் நடத்தப் போவதாக படக்குழு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாகவும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : ஜூம் பண்ணி பாத்தா கிறுகிறுக்க வைக்குது!.. மொத்த அழகையும் காட்டும் நித்தி அகர்வால்!..
சினிமாவைப் பொறுத்தவரைக்கும் ஒரு நடிகர் உச்சம் பெற்றவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்களை கண்டிப்பாக கடந்துதான் வந்திருக்க வேண்டும். அந்த வகையில் அஜித்திற்கும் அப்படி ஒரு கசப்பான சம்பவம் நான் கடவுள் படத்தின் போது ஏற்பட்டிருக்கிறது.
நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித். அந்த நேரத்தில் அஜித் 6 கோடி வரை சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்தாராம். பாலா படம் என்றதும் தனது சம்பளத்தை 2 கோடியாக குறைத்துக் கொண்டாராம். அவருக்கு அட்வான்ஸாக ஒரு தொகையை பாலாவும் மதுரை அன்புவிடம் இருந்து வாங்கி கொடுத்தாராம்.
இதையும் படிங்க : நயன்தாராவை அசிங்கமா பேசிய அந்த பிக் பாஸ் ஜொள்ளு பார்ட்டி!.. கடுப்பான ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
இந்தப் படத்திற்காக அஜித் மிகவும் நீண்ட தலைமுடியுடன் உடம்பையும் குறைத்துக் கொண்டு இரண்டு மாதமாக காத்துக் கொண்டிருந்தாராம். பாலாவை பொறுத்தவரைக்கும் முழு கதையையும் சொல்லமாட்டாராம். ஒன் லைன் மட்டும் தான் சொல்வாராம்.
இப்படி நாள்கள் நீண்டு கொண்டே போக பாலாவிடம் கதையை கேட்டிருக்கிறார் அஜித். உடனே பாலா என்னிடமே கதையை கேட்கிறாயா? என்ற கோபத்தில் கொடுத்த அட்வான்ஸை வட்டியுடன் கொடுக்கும் படி கறாரா கேட்டாராம்.
இதையும் படிங்க : அங்க இருக்க சரக்கை விட நீதான் செமயா போதை ஏத்துற!.. ஜூம் அடித்து பவர் கிக்காகும் யங்ஸ்டர்ஸ்!..
ஆனால் அஜித் வாங்கிய அட்வான்ஸை வேண்டுமென்றால் கொடுத்து விடுகிறேன். ஆனால் வட்டி எல்லாம் தரமுடியாது என்று சொல்லியிருக்கிறார். இப்படி பேச்சு இழுத்து கொண்டே போக கோபத்தில் அஜித் தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைச்சு எழுந்து போய்விட்டாராம். அதன் பிறகு வெளியே பணத்தை ஏற்பாடு செய்து பாலாவிடம் பணத்தை கொடுத்தாராம் அஜித். இந்த செய்தியை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் கூறினார்.