நடிப்பை பார்த்து குபீர்ன்னு கேட்ட சிரிப்பலை… சினிமாவை பார்த்து பயந்து ஓடிய சூர்யா…

Suriya
சூர்யா முதன்முதலில் அறிமுகமான திரைப்படம் “நேருக்கு நேர்” என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். குறிப்பாக “நேருக்கு நேர்” படத்தில் சூர்யா நடித்தபோது ஏற்பட்ட அவமானங்களை குறித்தும், அதனை நினைத்து சூர்யா அழுதது குறித்தும் ஒரு பேட்டியில் கூறியிருந்தது இணையத்தில் வைரல் ஆனது.
தனது தந்தையான சிவக்குமார், மிகச்சிறந்த நடிகராக இருந்தபோதிலும் சூர்யாவுக்கு நடிப்பின் மீதெல்லாம் ஆசையே வரவில்லை. சூர்யா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அவருக்கு “செம்பருத்தி” படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததாம். ஆனால் சிவக்குமார், சூர்யாவின் படிப்பு முதலில் முடியட்டும், அதன் பிறகு சூர்யா இஷ்டப்பட்டதை செய்யட்டும் என கூறிவிட்டாராம்.

Suriya
மேலும் சிவக்குமாரின் மிக நெருங்கிய நண்பராக திகழ்ந்த இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், சூர்யாவை நடிகராக்க பல முயற்சிகளில் ஈடுபட்டாராம். ஆனால் சூர்யா நடிக்க மறுத்துவிட்டாராம். சூர்யாவுக்கு தான் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக ஆகவேண்டும் என்ற ஆசைதான் இருந்ததாம். சினிமா மீது அவருக்கு துளி கூட விருப்பம் இல்லாமல் இருந்ததாம். அதற்கு சிறு வயதில் அனுபவப்பட்ட ஒரு சம்பவம் காரணமாக கூறப்படுகிறது.
அதாவது சூர்யா, பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாடகத்தில் எமதர்ம வேஷத்தில் நடித்தாராம். அப்போது எமதர்மன் போல் சூர்யா கம்பீரமாக சிரித்தபோது, அதனை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள், சூர்யாவின் குரல் பூனைக்குட்டி கத்துவது போல் இருப்பதாக கேலி செய்து சிரித்தார்களாம். அப்போது அந்த நாடகம் நடந்துகொண்டிருந்தபோதே சூர்யாவை நீக்கிவிட்டு வேறு ஒரு மாணவனை அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார்களாம்.

Suriya
இந்த சம்பவத்தை தொடர்ந்துதான் சூர்யா, தனக்கு நடிப்பு வராது, சினிமா எல்லாம் நமக்கு ஒத்துவராது, தனது தம்பி கார்த்திக்கிறகுத்தான் சினிமா சரியாக வரும் என எண்ணிக்கொண்டாராம். அதன் பிறகுதான் தான் ஒரு தொழிலதிபர் ஆக வேண்டும் என முடிவு எடுத்தாராம் சூர்யா.
சூர்யா கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஒரு கார்மென்ட் பேக்டரியில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த தொழிலில் உள்ல பல்வேறு நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டாராம். அதன் பின் சூர்யா சொந்தமாக ஒரு கார்மென்ட் பேக்டரியை தொடங்க வேண்டும் என நினைத்தபோது, எவ்வளவு பெரிய போட்டி அந்த தொழிலில் நிலவி வருகிறது என்பதை புரிந்துகொண்டாராம். ஆதலால் அவரது மனம் சஞ்சலம் அடைந்தபோதுதான் இயக்குனர் வஸந்திடம் இருந்து அழைப்பு வந்ததாம்.
இதையும் படிங்க: “வாலி ஒழிக”… போர் கொடி தூக்கிய பெரியாரிய போராளிகள்… ரஜினி பட பாடலால் வெடித்த சர்ச்சை…

Nerukku Ner
“மணிரத்னம் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணப்போகிறேன் சரவணா. நீதான் நடிக்கப்போற” என கூறினாராம். (சூர்யாவின் இயற்பெயர் சரவணன் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்). சினிமாவில் நடிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று சில நாட்கள் அவகாசம் கேட்டாராம் சூர்யா. அதன் பிறகு ஒரு நாள் சினிமாவில் நடித்துப் பார்க்கலாம் என முடிவெடுத்தாராம் சூர்யா. இவ்வாறுதான் சூர்யா சினிமாவுக்குள் நுழைந்தார்.