Connect with us
rajinikanth

Cinema History

ரஜினிக்கு பக்காவா ஸ்கெட்ச் போட்ட ஏவிஎம்!.. ரஜினி அடிச்சி நொறுக்கிய அந்த படம்!..

Actor rajinikanth: தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆனால் இப்படத்தில் இவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. வில்லனாகதான் தனது நடிப்பினை தொடங்கினார்.

பின் மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமடைய துவங்கினார். வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்த இவருக்கு பைரவி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. பின் இவர் நடித்த படங்களில் மூலம் இவர் சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு சென்றார்.

இதையும் வாசிங்க:இதுதான் கரெக்ட் டைம்!.. சிவகார்த்திகேயனுக்கு கட்டம் கட்டிய தனுஷ்!.. தப்பிப்பாரா எஸ்.கே?!..

திறமைக்கும் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். இவர் தனது ஸ்டைலான நடிப்பின் மூலம் சினிமாவில் தனக்கென தனி அந்தஸ்த்தை பெற்றவர். ரஜினி நடித்தாலே அப்படம் வெற்றிதான் என கூறும் அளவுக்கு இவர் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார்.

இவர் எந்திரன், சந்திரமுகி, ஜெயிலர் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்த ரஜினிகாந்த் தனது 170வது திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு பின் இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதையும் வாசிங்க:நடிக்க ஓகே சொன்ன சிவாஜி.. ஆனாலும் ரிஜெக்ட் செய்த சேரன்!.. இதுதான் காரணமா?..

இவரின் முள்ளும் மலரும் திரைப்படத்தை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவருக்கு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். மேலும் இவர் வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகராக வருவார் என அவருக்கு தோன்றியதாம். உடனே ரஜினியிடம் ஆள் அனுப்பி கேட்டாராம். ரஜினியும் ஏவிஎம் என்றதும் உடனே நடிக்க ஒத்துகொண்டாராம்.

பின் ரஜினியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இப்படி உருவான படம்தான் ரஜினி நடிப்பில் வெளியான முரட்டு காளை திரைப்படம். இப்படத்தை இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் ரதி, ஜெய்சங்கர், சுருளிராஜன் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் வாசிங்க:சிவாஜிகிட்டயே தனது வேலையை காட்டிய சந்திரபாபு… குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான் போல…

google news
Continue Reading

More in Cinema History

To Top