அவதார் 3 பட தலைப்பே தாறுமாறே இருக்கே!.. ரிலீஸ் தேதியையும் சொல்லிட்டாரே ஜேம்ஸ் கேமரூன்!..
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஜேம்ஸ் கேமரூன். ஏலியன், தி டெர்மினேட்டர், டைட்டானிக்என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவரின் படங்கள் உலகம் முழுவதும் வசூலை குவிக்கும். இவரின் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படம் உலகத்திலேயே அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை பெற்றது.
அதன்பின் அந்த படத்தின் வசூலை ஜேம்ஸ் கேமரூன் அடுத்து இயக்கிய அவதார் திரைப்படம் முறியடித்தது. உலகமெங்கும் பல மொழிகளிலும் வெளியான இந்த திரைப்படம் பல ஆயிரம் கோடி வசூலை பெற்றது. ஒரு புதிய உலகை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.
இதையும் படிங்க: நீங்க செஞ்சிட்டு போவீங்க.. அவனுங்க கிட்ட அது நடக்காதே… சூப்பர்ஸ்டாரே கடுப்பான சம்பவம்!
2009ம் வருடம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய் அனுபவத்தை கொடுத்தது. படம் வெளியாகி சில வருடங்களில் இப்படம் 3டி-யிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. முதல் பாகம் சூப்பர் ஹிட் அடிக்கவே இப்படம் இன்னும் 5 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.
அதோடு ரிலீஸ் தேதிகளையும் அறிவித்தார். அதன்படி, 13 வருடங்கள் கழித்து 2022ம் வருடம் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகம் நிலத்தோடு தொடர்புடையது எனில், இரண்டாம் பாகம் நீரோடு தொடர்புடையதாக இருந்தது. படத்தின் தலைப்பே Avatr - They way of water என வைக்கப்பட்டிருந்தது.
தலைப்புக்கு ஏற்றது போல அப்படத்தின் பல காட்சிகளும் தண்ணீரிலேயே எடுக்கப்பட்டிருந்தது. இந்த படமும் பெரும் வெற்றியை பெற்று வசூலை அள்ளியது. தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 3ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், அவதார் படத்தின் 3ம் பாகம் தொடர்பான அறிவிப்பை ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டிருக்கிறார். இந்த படத்திற்கு AVATAR - FIRE AND ASH அதாவது அவதார் - நெருப்பும் சாம்பலும் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த படம் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என் அவர் அறிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ‘கோட்’ ரிலீஸ் ஆகும் வரை கம்முனு இருங்க! ரசிகர்களை கப் சிப்பாக்கிய் விஜய்.. ஒரு முடிவோடத்தான் இருக்காரு