இந்த படமே வேண்டாம்… சிவாஜி சொன்ன வார்த்தையால் ஏவிஎம் எடுத்த அதிரடி முடிவு… என்னவா இருக்கும்!

by Arun Prasad |
Sivaji Ganesan
X

Sivaji Ganesan

1968 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் “உயர்ந்த மனிதன்”. இத்திரைப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கியிருந்தனர். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.

Uyarndha Manithan

Uyarndha Manithan

1966 ஆம் ஆண்டு வங்காள மொழியில் வெளியான “உத்தர் புருஷ்” என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் “உயர்ந்த மனிதன்”. “உத்தர் புருஷ்” திரைப்படத்தை பார்த்த ஏவி மெய்யப்பச் செட்டியாருக்கு இத்திரைப்படம் மிகவும் பிடித்துப்போனது. அதன்பின் இத்திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினார் மெய்யப்பச் செட்டியார்.

இத்திரைப்படத்தில் சிவாஜியை நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினார் அவர். ஆனால் சிவாஜிக்கும் ஏவிஎம் நிறுவனத்திற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தது. ஆதலால் வெகு காலம் சிவாஜி கணேசன் ஏவிஎம் திரைப்படங்களில் நடிக்கவே இல்லை.

AV Meiyappa Chettiyar

AV Meiyappa Chettiyar

எனினும் இதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் சிவாஜியிடம் பேசுவதற்கு ஏவிஎம் சகோதரர்களை அனுப்பினார் மெய்யப்ச் செட்டியார். சிவாஜியும் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் பின் சிவாஜிக்கு “உத்தர் புருஷ்” திரைப்படத்தை திரையிட்டுக்காட்டினார்கள்.

Uyarndha Manithan

Uyarndha Manithan

அதில் வரும் ஒரு டாக்டர் கதாப்பாத்திரத்தில் தான் நடிப்பதாக சொன்னார் சிவாஜி கணேசன். அந்த டாக்டர் கதாப்பாத்திரம் சில காட்சிகளில்தான் இடம்பெறும். ஆனால் ஏவி மெய்யப்பச் செட்டியாரோ, சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தால்தான் இந்த படத்தை தயாரிப்பதாகவும் இல்லை என்றால் இந்த படமே வேண்டாம் எனவும் முடிவு செய்தாராம். அதனை தொடர்ந்துதான் சிவாஜி கணேசன் “உயர்ந்த மனிதன்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

இதையும் படிங்க: முதல் படமே ஃப்ளாப்… எப்படியாவது வாய்ப்பு வாங்கி கொடுங்களேன்… புலம்பித் தள்ளிய ரஜினி பட இயக்குனர்… இவரா இப்படி!

Next Story