Cinema History
சாவித்திரி ஆசை ஆசையாய் கொடுத்த உப்புமா… கீழே துப்பிய கமல்…!
இன்று உலகநாயகன் என்று எல்லோராலும் கொண்டாடப்படும் கமல்ஹாசன் முதன் முதலில் நடித்த படம் களத்தூர் கண்ணம்மா. முதல் படத்திற்கே தேசிய விருதையும் பெற்றார். அந்தப் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு? எப்படி நடித்தார் என்பதை ஏவிஎம் சரவணன் சொல்லக் கேட்போம்.
களத்தூர் கண்ணம்மால முதல்ல டெய்சி ராணியைத் தான் புக் பண்ணியிருந்தோம். முதல்ல பத்தாயிரம் ரூபா பேசி ஆயிரம் ரூபா கொடுத்தோம். யார் பையன்கற படத்துல பையனா ஆக்ட் பண்ணிச்சி. அப்ப இந்தப் பையன் வந்துருந்தான். மகள பார்க்கறதுக்கு சாரா ராமச்சந்திரன்கற லேடி டாக்டர் தான் கூட்டிட்டு வந்தாங்க.
இந்தப் பையன நடிச்சிக்காட்டச் சொன்னோம். எம்ஜிஆர், சிவாஜி மாதிரி நடிச்சிக் காட்னான். டான்ஸ்லாம் ஆடினான். சரிப்பா நாளைக்குக் கூட்டிட்டுப் போயி ஜெமினிகணேசன்ட காட்டுன்னோம். ஸ்டூடியோவுக்குப் பின்னாடி மாந்தோப்பு. அங்க சூட்டிங் எடுத்தோம். மாங்கா பறிக்கிற சீனப் பார்த்ததும் ஐயய்யோ டூப் மாங்கான்னு சொன்னான்.
அப்புறம் ஒரு வீட்ட செட் போட்டு எடுத்தோம். ஐயய்யோ டூப் வீடுன்னான். அப்புறம் சாவித்திரி உப்புமா சாப்பிடக் கொடுக்குறாங்க. வாயில வச்சதும் ஐயய்யோ டூப் உப்புமான்னு துப்பிடறான். அப்புறம் நல்ல உப்புமா தான்டான்னு நாங்கள்லாம் சாப்பிட்டு காட்டி சமாதானம் செஞ்சதும் தான் சாப்பிட்டான். அந்தளவுக்கு ரொம்ப சென்சிடிவ்வான பையன்.
அப்ப கமலுக்கு முதல் முதலா ஆயிரம் ரூபா சம்பளம் கொடுத்தோம். நான் பண்ணதுல குறைஞ்ச பட்ஜெட் குறைஞ்ச நாள்கள்ல எடுத்த படம் சம்சாரம் அது மின்சாரம். அது தான் 35 நாள்கள்ல எடுத்தோம்.