தமிழில் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னதிரை தொலைகாட்சிகளில் தொகுப்பாளராக இருந்த இவர் பின் தனது கடின உழைப்பாளும் விடாமுயற்சியினாலும் சினிமாவி நுழைந்தார்.
தனது முதல் படமான மெரினா பெரிய அளவில் வெற்றியை காணாவிட்டாலும் எதிநீச்சல் திரைப்படத்தின் மூலம் தனது வெற்றியை பதிவு செய்தார். இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், நம்ம வீட்டு பிள்ளை, ரெமோ போன்ற பல வெற்றி படங்களின் மூலம் சினிமா துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்து கொண்டார்.
இதையும் படிங்க:சிவாஜி படத்த பார்க்க மாட்டேன்… என் மேல நம்பிக்கை இருந்தா குடுங்க… ஓபனா சொன்ன நடிகர்…
பின் இவர் நடிப்பில் வந்த சீமராஜா, பிரின்ஸ் போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றி படமாக அமையவில்லை. பின் இந்த ஆண்டு வெளியான மாவீரன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி கண்டார்.
இவர் தற்போது இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராகுல் பிரித் சிங் நடிக்கவுள்ளார். மேலும் தயாரிப்பாளர் ராஜா தயாரித்து ஏ.அர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
இதையும் படிங்க:ரெண்டு பேருக்கும் தீனி போட்டா விஸ்வாசத்தை அங்க போய் காட்டுதுங்க! வாரிக் கொடுத்த மனுஷனுக்கு காட்டும் நன்றியா இது?
இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சையிலிருந்தே அவர் இன்னும் வெளிவராததாலும் மற்றும் அக்டோபர் மாதம் லண்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்த பின்னரே இப்படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். அதனால் இப்படம் தர்போது பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:இறைவன் படக்குழுவிற்கு வந்த அதிர்ச்சி நியூஸ்!… என்னங்க ஜெயம் ரவி இப்படி ஆகிப்போச்சே!..
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…