உங்கள வச்சிக்கிட்டு ஒன்னு காப்பி அடிக்க முடியுதா?!.. அயலான் படம் அந்த படத்தோட காப்பியாம்!.

by சிவா |
ayalan
X

Ayalan movie: இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இளம் இயக்குனர் ரவிக்குமார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், அப்படம் வெளிவந்து 8 வருடங்கள் ஆகியும் அவரின் அடுத்த படம் வெளியாகவில்லை. இன்று நேற்று நாளை படத்திற்கு பின் மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையையே ரவிக்குமார் உருவாக்கினார்.

இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப்போக அவரின் தயாரிப்பிலேயே படம் உருவானது. ஆனால், 4 வருடங்களுக்கும் மேல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏனெனில், இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே அதை கிடப்பில் போட்டுவிட்டு வேறு படத்திற்கு போய்விடுவார் சிவகார்த்திகேயன்.

இதையும் படிங்க: அயலானுக்கு இந்நேரம் அல்லு விட்டுருக்குமே!.. தனுஷின் கேப்டன் மில்லர் டிரெய்லர் எப்படி இருக்கு?..

இப்படி அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் நடித்ததுதான் இந்த அயலான் திரைப்படம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கருணாகரன், யோகிபாபு, ரகுல்ப்ரீத் சிங் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியான நிலையில், நேற்று டிரெய்லர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்போது படக்குழுவினர் இப்படத்தின் புரமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர். வழக்கமாக ஒரு படம் வெளியானால் இது இந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் என சொல்வார்கள்.

இதையும் படிங்க: யார்கிட்ட இருந்து வேணுனா தப்பலாம்! ப்ளூ சட்டை மாறன்கிட்ட முடியுமா? சிவகார்த்திகேயனை கிழித்து தொங்கவிட்ட பதிவு

ரசிகர்கள் சொல்து போலவே சில இயக்குனர்களும் பல ஹாலிவுட் படங்களின் கதைகளில் ஒரு வரிக்கதையை கொஞ்சம் மாற்றி படமாக எடுக்கின்றனர். விஜயின் லியோ படமே ஒரு ஆங்கில படத்தின் காப்பி என சொன்னார்கள். இந்நிலையில், அயலான் திரைப்பம் பால் (Paul 2011) என்கிற படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது.

ayalan

வழி தவறி வந்த ஒரு ஏலியனை ஒரு குழு ஆராய்ச்சிக்காக பயன்படுத்த நினைக்க 3 பேர் சேர்ந்து அவர்களிடமிருந்து ஏலியனை காப்பாற்றி எப்படி விண்வெளிக்கே அனுப்பி வைத்தனர் என்பதுதான் இப்படத்தின் கதை. ஏலியனோடு சேர்ந்து அவர்கள் அடிக்கும் லூட்டியை சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருந்தனர். அயலான் படமும் கிட்டத்தட்ட அதுபோன்ற கதைதான் என சொல்லப்படுகிறது. ஆனால், இதை இப்பட இயக்குனர் ரவிக்குமார் மறுத்திருக்கிறார். படம் வந்தால் என்னவென்று தெரிந்துவிடும்.

இதையும் படிங்க:aவறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?

Next Story