வறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?

Published On: January 6, 2024
| Posted By : Rohini
kanth

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் 40ஆண்டுகள் கோலோச்சி இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவரின் மறைவு அனைத்து தரப்பினரையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த நிலையில் இவரின் சொந்த ஊரான மதுரையில் பூர்வீக வீடு உள்ளது.

ஆண்டாள் பவனம் என்ற பெயரில் அந்த வீடு உள்ளது. விஜயகாந்தை சேர்த்து உடன்பிறந்தவர்கள் மொத்தம் 11 பேராம். 6 ஆண்பிள்ளைகள் 5 பெண்பிள்ளைகள். அதில் இரண்டாவதாக பிறந்தவர்தான் விஜயகாந்த். ஆரம்பத்தில் இருந்தே தன் குடும்பத்தின் மீதும் உடன் பிறப்புகள் மீதும் அலாதி அன்பும் அக்கறையும் கொண்டவராக இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: இரவோடு இரவாக கேப்டன் செய்த வேலை!.. ஆடிப்போய் சத்தியராஜ் செய்த காரியம்…

ரைஸ் மில்லில் இருக்கும் போதே அனைவருக்கும் வயிறார சாப்பாடு போட வேண்டும் என்று நினைப்பாராம். சினிமாவில் நடிக்கும் போது முதலில் தன் சகோதர சகோதரிகளுக்கு திருமணம் செய்த பிறகே நான் திருமணம் செய்வேன் என எல்லாருக்கும் திருமணம் செய்துவைத்து தன் 37வது வயதில் திருமணம் செய்திருக்கிறார் விஜயகாந்த்.

தனிக் கட்சி தொடங்குவது, எதிர்கட்சி தலைவராக ஆன பிறகு மதுரைக்கு வருவதே அரிதாகிவிட்டதாம் விஜயகாந்துக்கு. அரசியலுக்கு வருவதற்கு முன்பு வரை தன்னுடன் பிறந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்திருக்கிறார். அவர்களுடைய மகன்களுக்கும் தேவையான உதவிகளை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் காலியான போட்டியாளர்!… பிக்பாஸ் சீசன் 7ல் டிவிஸ்டுக்கு மேல் டிவிஸ்ட்டா?

ஆனால் அவர் உடல் நிலையும் சரியில்லாமல் போன பிறகு நிற்கதியாகியிருக்கின்றனர் அவருடைய சகோதரர்கள். இப்பொழுது கேப்டனும் இல்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகின்றார்கள். ஒரு சகோதரர் குழந்தைகளுக்கான பெட்டை வாங்கி விற்கும் தொழிலை செய்துவருகிறாராம்.

இன்னொரு சகோதரர் அந்த பூர்வீக வீட்டிலேயே சிறிய சிற்றுண்டி மாதிரி வைத்து நடத்தி வருகிறாராம். சகோதரிகள் எல்லாம் சென்னை, தேனி, ஓசூர் என வெவ்வேறு ஊர்களில் இருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: காதலிக்காக நிஜமாகவே பச்சை மிளகாயைத் தின்று அசத்திய தனுஷ்… அட அவர் அப்பவே அப்படித்தான்!..