அயலான் படத்துக்கு ஷாருக்கான் வச்ச ஆப்பு!.. செம கடுப்பில் எஸ்.கே!. எல்லாம் அவர் செஞ்ச வேலை!..
திரைப்பட உலகில் எப்போது யார் முலம் பிரச்சனை வரும் என சொல்லவே முடியாது. கண்ணுக்கு தெரியாத, கற்பனையே செய்து பார்க்கவே முடியாத படி விஷயத்தில் இருந்து கூட பிரச்சனைகள் வரும். இப்படித்தான், சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மூலம் சிக்கல் வந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்று ரிலீஸ் என்றாலே பஞ்சாயத்து என்பது கண்டிப்பாக இருக்கும். அதற்கு காரணம் அவர் வைத்திருக்கும் கடன்தான். கிட்டத்தட்ட 100 கோடி வரை அவர் வைத்திருந்த கடன் பல வருடங்களாகவே அவரை துரத்தி வந்தது. சொந்த படம் எடுத்தில் அதில் நஷ்டமடைந்து கடனாளி ஆனார்.
இதையும் படிங்க: விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் வரது விஜய் கையில் இருக்கு!.. அஜித் போடும் ஸ்கெட்ச்!.. சிக்குவாரா தளபதி!.
எனவே, அவரின் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆதவற்கு முதல் நாள் ‘காசை கொடு.. இல்லையேல் படம் ரிலீஸ் ஆகாது’ என கட்டையை போடுவார்கள். இதனால் சில படங்களில் சம்பளத்தை அப்படியே கொடுத்தார். அயலான் படத்திற்கும் அவர் சம்பளம் வாங்காமல்தான் நடித்தார்.
ஆனாலும், பட ரிலீஸுக்கு பிரச்சனை வந்தது. எனவே, மேலும் 30 கோடியை கொடுத்து மொத்த கடனிலிருந்தும் மீண்டார். அப்போது அப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இதனால் அவர் மீது கோபத்தில் இருந்தார் எஸ்.கே.
அயலான் படம் கடந்த 26ம் தேதி தெலுங்கில் வெளியாகவிருந்தது. இதற்காக ஆந்திரா போய் புரமோஷன் எல்லாம் செய்தார் எஸ்.கே. ஆனால், இப்போது படம் வெளியாகவில்லை. அதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ்தான். அதாவது அயலான் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம்தான் செய்துள்ளது. அதில் தமிழ் வெர்சன் வெளியாகும்போது சில லட்சங்கள் பாக்கி இருந்துள்ளது.
இதையும் படிங்க: விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் வரது விஜய் கையில் இருக்கு!.. அஜித் போடும் ஸ்கெட்ச்!.. சிக்குவாரா தளபதி!.
ஆனால், கேமராமேன் நீரவ் ஷா உள்ளிட்ட சிலர் சொல்லியதால் அப்போது விட்டுவிட்டனர். இப்போது தெலுங்கு வெர்ஷன் வெளியாகும்போது ‘காசை கொடுக்காமல் காப்பியை கொடுக்க முடியாது’ என சொல்லிவிட்டனர். இதனால்தான் கடந்த 26ம் தேதி அயலான் படம் ஆந்திராவில் வெளியாகவில்லை. இதனால் கே.ஜே.ராஜேஷ் மீது செம கடுப்பில் இருக்கிறார் எஸ்.கே. இத்தனைக்கும் அது 25 முதல் 30 லட்சம் பணம்தான் என சொல்லப்படுகிறது.
அயலான் படம் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகலாம் என ஆசையாக இருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால், இப்படி நடந்துவிட்டது. ஒருபக்கம் ரெட்சில்லி நிறுவனம் செய்த வேலையில் கோபமடைந்த கே.ஜே.ராஜேஷ் டிவிட்டரில் ‘குட் ஜாப் ரெட் சில்லி’ என பதிவிட்டிருக்கிறார். இது ரெட் சில்லி நிறுவனத்த்திற்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வருவதற்கு இதுதான் காரணமா?.. அதனால் யாருக்கு ஆபத்து?..