ஆயிரத்தில் ஒருவன் 2 வேண்டாம்.. செல்வராகவனை அப்செட் ஆக்கிய தனுஷ்.. சோகத்தில் ரசிகர்கள்...
தமிழ் சினிமா ரசிகர்களால் தற்போது சற்று லேட்டாக கொண்டாடபட்டு வரும் கலைஞர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்கள் ரிலீஸின் போது பெரிதாக பேசப்படவில்லை.
ஆனால், தற்போது அதனை கொண்டாடி வருகின்றனர். மேலும், அதன் இரண்டாம் பாகங்களை கேட்டு ரசிகர்கள் இணையத்திலும், சரி நேரிலும் சரி செல்வராகவனை நச்சரித்து வருகின்றனர். இதில் ஆயிரத்தில் ஒருவன் 2 2024இல் தயாராகும் என செல்வராகவனே அறிவித்தார்.
அதில் தனுஷ் , செல்வராகவன் பெயர்கள் மட்டுமே இருந்தது. அதனால், முதலில் ஆயிரத்தில் ஒருவன் 2 தான் தாயராகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த வேளையில், தற்போது ஷாக்கிங் செய்தி வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்களேன் - இப்படி செஞ்சிட்டிங்களே சாய் பல்லவி.?! ரஜினி பட மெகா ஹிட் இயக்குனரின் நிலைமையை பாருங்க...
தற்போதைய சூழ்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் 2 எடுத்தால் நிறைய நாட்கள் கால்ஷீட் , கெட்டப் மாற்ற வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். ஆனால், புதுப்பேட்டை 2 எடுத்தால் இது எதுவும் தேவையில்லை என தனுஷ், செல்வராகவனுக்கு யோசனை கூறியுள்ளாராம்.
அதன் படி தான் தற்போது புதுப்பேட்டை 2தான் முதலில் தயார் செய்ய செல்வராகவன் கதை எழுதி வருகிறாராம். தனுஷ் இப்படி யோசனை சொல்லி ஆயிரத்தில் ஒருவனை ஸ்டாப் செய்து விட்டாரே என ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருக்கின்றனர். இருந்தாலும் புதுப்பேட்டை 2வாவது வருகிறதே என்று மனதை ஆசுவாசப்படுத்தி இருக்கின்றனர்.