வெற்றிக்கு நடுவில் இருக்கும் சோகம்.. ‘அயோத்தி’ படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?..
தமிழ் சினிமாவில் சமீப காலமாக சின்ன சின்ன பட்ஜெட்டில் எடுக்கும் திரைப்படங்கல் எல்லாம் எதிர்பார்க்காத அளவில் பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. அதிலும் படக்குழுவே நினைத்து பார்க்காத அளவில் வெற்றியை பதிவு செய்து வருகின்றன.
அந்த வகையில் லவ் டுடே, டாடா போன்ற படங்களை குறிப்பிடலாம். இதில் சமீபத்தில் சசிகுமாரின் ‘அயோத்தி’ படமும் சேர்ந்திருக்கிறது. மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்து வெளியான படம் தான் அயோத்தி.
மந்திரமூர்த்திக்கு இந்தப் படம் தான் அறிமுகபடமாகும். ஆனால் முதல் படத்திலேயே இந்த அளவுக்கு கருத்துக்களை சொல்ல முடியுமா என்ற கேள்வியை எழுப்பவைத்திருக்கிறார். மதங்களை தாண்டி மனிதத்தை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு பிறகு சசிகுமார் நடிப்பில் வெற்றியை பதிவு செய்த படமாக அயோத்தி அமைந்திருக்கிறது. ரசிகர்கள் , பிரபலங்கள் என அனைவரும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க : நக்மா மொபைலுக்கு வந்த மெசேஜ்… திடீரென காணாமல் போன லட்ச ரூபாய்… இவ்வளவு பெரிய மோசடியா?
ஆனாலும் இந்த படத்திற்கான எந்த புரோமோஷனும் பண்ணாதது தான் அனைவருக்கும் வருத்தத்தை அளிக்கின்றது. ஒரு வேளை புரோமோ, ப்ரஸ் மீட் என வைத்திருந்தால் இன்னும் இந்தப் படத்தின் ரீச் அதிகளவு இருந்திருக்குமே என்று ஆதங்கப்படுகின்றனர்.
மேலும் ஒரு இயக்குனராக சசிகுமார் இருந்திருக்கிறார். அவரும் ஏன் இதைப் பற்றி பேசியிருக்கமாட்டாரா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றன. அந்த அளவுக்கு இந்தப் அடம் மாபெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.