பிபி6 வெற்றியாளரை மறைமுகமாக விமர்சித்த கமல்ஹாசன்..! நெத்தியடியாக அடித்த அசீம்..! எங்க திரும்புனாலும் அடி..!

Biggboss Tamil7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார பிரச்னை இன்னமும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. அதே நேரத்தில் இன்னொரு பிரச்னையும் போற போக்கில் கிளப்பி விட்டு இருக்கிறார். தற்போது அதுவும் ட்ரெண்ட்டாகி இருக்கிறது.

கடந்த வார இறுதியில் ப்ரதீப் ஆண்டனிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கடுப்பாகி பேசி இருந்தார் கமல்ஹாசன். அவர் பேசும் போது கடந்த சீசன் வின்னர்கள் அடாவடியை எடுத்து கொண்டது போல எல்லாரும் அதையே கையில் எடுத்து கொண்டு வரக்கூடாது என்றார்.

இதையும் படிங்க:சிவாஜி நடித்த பாடலுக்கு குரல் கொடுத்த டி.எம்.எஸ்!.. ஆனாலும் அப்செட் ஆன எம்.எஸ்.வி.

இது கடந்த சீசன் வின்னர் அசீமை தான் தாக்கினார் என ரசிகர்கள் ட்வீட் தட்டினர். இதையடுத்து அசீம் ஹேஸ்டேக் வைரலானது. வெற்றியாளரை நீங்களே கலாய்க்கலாமா? அப்போ ஏன் கப்பு கொடுத்தீங்க என கமல் மீதே நேரடி தாக்குதல் செய்து வருகின்றனர்.

இதனையடுத்து அசீம் அளித்திருக்கும் சமீபத்திய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், அந்த ஷோவை தொகுத்து வழங்கினதே கமல் சார் தான். கப்பை என் கையில் கொடுத்ததே அவர் தான். அந்த சந்தேகம் ஏன் அவருக்கு அப்போவே வரவில்லை.

இதுவே வெளியில் இருக்கும் ஒருவர் பேசி இருந்தால் சரி. ஆனால் சேனலில் முக்கிய இடம் பிடிக்கும் கமல்ஹாசன் பேசுவது எனக்கே வருத்தமாக இருக்கிறது. இது வேற எண்ணத்தில் பேசி இருந்தால் ஓகே. ஆனால் மக்கள் வோட்டை அவர் சந்தேகப்பட்டு பேசி இருப்பது தப்பு எனத்தான் எல்லாரும் பேசி வருவதாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க: கடனில் மூழ்கிய சிவாஜி… மகனாக நின்று ரஜினி செய்த காரியம்… என்ன மனுஷன்ப்பா…

இதை தொடர்ந்து ப்ரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்ததையுமே நான் சரியாக பார்க்கவில்லை. அதுவும் பெண்கள் விஷயத்தில் மையப்படுத்தி கொடுத்ததையும் நியாயப்படுத்த முடியாது. கமல் ப்ரதீப்புக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். அதையடுத்து அவர் செய்து இருந்தால் பரவாயில்லை. வாய்ப்பே கொடுக்காமல் ரெட் கார்ட் தப்பு தான் எனத் தெரிவித்து இருக்கிறார்.

 

Related Articles

Next Story