Connect with us

Cinema News

மொக்கையான வசனத்தை சூப்பர் வசனமாக மாற்றிய ரஜினி… சூப்பர் ஸ்டார்தான் சும்மாவா??

1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் ஆகியோரின் நடிப்பில் மாஸ் ஹிட் ஆன திரைப்படம் “பாட்ஷா”. இத்திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று வரை ரஜினியின் சினிமா கேரியரில் டாப் லிஸ்ட்டில் இருக்கும் திரைப்படம் என்றால் அது “பாட்ஷா”தான். அந்தளவுக்கு ரஜினியின் வாழ்க்கையையே மாற்றியது என்றுகூட சொல்லலாம்.

இத்திரைப்படத்திற்கு பிறகுதான் ரஜினியின் அரசியல் பிரவேசப்பேச்சுக்கள் பரவலாகியது. அந்த அளவுக்கு ரஜினிகாந்த்தின் மார்க்கெட்டையும் கெத்தையும் ஏற்றுவது போல் இத்திரைப்படம் அமைந்திருந்தது. இத்திரைப்படத்தில் நடித்திருந்த ரகுவரனை பற்றி குறிப்பாக சொல்லவேண்டும்.

ரகுவரன் ஏற்று நடித்திருந்த ஆண்டனி என்ற வில்லன் கதாப்பாத்திரன் தமிழ்சினிமாவின் டாப் மோஸ்ட் வில்லனாக இப்போது வரை டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. எந்த வித செயற்கை நடிப்பும் இல்லாமல் யதார்த்த வில்லனாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார் ரகுவரன். மேலும் ரஜினியில் சினிமே கேரியரில் சவாலான வில்லனாகவும் திகழ்ந்தார். ஆம்!

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய ரஜினிகாந்த் “உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நான் இதுவரை நடித்ததில் இரண்டே வில்லன்கள் தான் எனக்கு சவாலாக அமைந்தவர்கள். ஒன்று பாட்ஷா வில்லன் ஆண்டனி ரகுவரன். மற்றொன்று படையப்பா வில்லி நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன்” என கூறினார். அந்த அளவுக்கு ரகுவரனின் நடிப்பு இருந்தது.

 பாட்ஷா திரைப்படத்தில் மிகவும் பிரபலாமான வசனமாக திகழ்ந்தது “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற வசனம்தான். ஆனால் அந்த வசனம் எழுதப்பட்டபோது “நான் ஒரு வாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்னமாதிரி” என எழுதியிருக்கிறார்கள். ஆனால் இது மாஸாக பொருந்தவில்லை என்று நினைத்த ரஜினிகாந்த், அந்த காட்சி படமாக்கப்பட்டபோது “ஒரு வாட்டி” என்ற வார்த்தையை “ஒரு தடவ ” என மாற்றியுள்ளார். தற்போது வரை இந்த வசனம்தான் பாட்ஷா திரைப்படத்திற்கு தனி அடையாளமாகவே இருந்துவருகிறது. சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா??

google news
Continue Reading

More in Cinema News

To Top