அவ்வளவு தான் எல்லாம் சும்மாவா? இரண்டாவது காதலியை பிரிந்த பப்லு பிரித்விராஜ்..?

Published on: November 30, 2023
---Advertisement---

Prithiviraj: சின்னத்திரை நடிகர் பிரித்விராஜ் கடந்த சில மாதங்கள் முன்னர் தன்னை விட ரொம்பவே குறைந்த வயதுடைய ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்து அனைவருக்கும் வயித்தெரிச்சல் கொடுத்து இருந்தார். தற்போது அந்த ஜோடி பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தவர் பிரித்விராஜ். இவரை சின்னத்திரை வட்டாரத்தினர் பப்லு என அழைப்பது வழக்கம். கடந்த சில வருடங்கள் முன்னர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிம்புவுடன் இவர் செய்த விவகாரம் தான் இவருக்கு பெரிய அளவிலான ரீச்சை கொடுத்தது.

இதையும் படிங்க: அடங்கப்பா முடியல… இனி இந்த கேரக்டர் மட்டும் செய்யவே மாட்டேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்..!

தொடர்ச்சியாக சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் பிரித்விராஜுக்கு கிட்டத்தட்ட 57 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 23 வயதில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகனும் இருக்கிறார்.  இவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தான் இவருக்கு ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டதாக செய்தி பரபரப்பானது. இதை தொடர்ந்து பப்லு பேட்டி மூலம் எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கோம் என ஓபனாக உடைத்தார். இருவருக்கும் கிட்டத்தட்ட 30 வயதுக்கு மேலான வித்தியாசம் என்பதால் ரசிகர்களே இதெல்லாம் சரியில்லை என்ற அளவுக்கு நக்கல் அடித்தனர்.

இதையும் படிங்க: பிக்பாஸ் டீம்மே அழுதுருவாங்க போலயே… வனிதா அக்கா உள்ள போறாங்களாம்… அப்போ இந்த வாரம் எலிமினேஷன்..?

ஆனால் இவர் ஷீத்தலை கப் கேக் எனக் கொஞ்சுவதும், வானத்தில் ப்ரோபோஸ் செய்த வீடியோவையும் யூட்யூப்பில் வெளியிட்டு கடுப்பேத்தி வந்தனர். இந்நிலையில் ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாவில் பிரித்விராஜுடன் எடுத்துக்கொண்ட வீடியோ, புகைப்படங்களை மொத்தமாக நீக்கி இருக்கிறார். ரசிகர் ஒருவர் இருவரும் பிரிந்துவிட்டனர் என கமெண்ட் செய்து இருந்தார்.

அதற்கும் ஷீத்தல் லைக் தட்டி இருக்கிறார். இதனால் எல்லாரும் திட்டி திட்டியே ஒரு ஜோடி காலி ஆகிவிட்டதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இதனை தொடர்ந்தாவது பிரித்விராஜ் தரப்பில் இருந்து விளக்கம் வருமா இல்லை சண்டை தான் என சப்பென முடித்துவிடுவார்களா என பொருத்திருந்து பார்ப்போம்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.