பிக்பாஸ் டீம்மே அழுதுருவாங்க போலயே… வனிதா அக்கா உள்ள போறாங்களாம்… அப்போ இந்த வாரம் எலிமினேஷன்..?

Vanitha: நடிகை வனிதா விஜயகுமார் கொடுக்கும் அலப்பறைக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வார எலிமினேஷனில் ஜோவிகா இருக்கும் நிலையில் இப்போ வனிதா தன்னுடைய ரிவியூவில் பேசி இருக்கும் தகவலால் பிக்பாஸ் டீமின் வோட்டிங்கே சந்தேகப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

கடந்த சில சீசன்களாகவே நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை ரிவியூ என்ற பெயரில் வறுத்தெடுத்து வருகிறார். இந்த சீசனில் அவரின் மகள் ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக உள்ளே இருக்கும் நிலையில் அவருக்கு முட்டு கொடுத்து வனிதா பேசுபவை அவ்வப்போது ட்ரெண்ட்டாகும்.

இதையும் படிங்க: காசு இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா?… ஞானவேல்ராஜாவை கிழித்தெடுத்த எஸ்.வி.சேகர்…

கடந்த வாரத்தில் கூட திடீரென ஒருவர் தன்னை தாக்கி விட்டதாக ஒரு புகைப்படத்தினை வெளியிட்டார். அதில் தன்னை தாக்கியவர் ப்ரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என வனிதா சொன்னது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ப்ரதீப்பும் தன்னுடன் வனிதா பேசிய வாட்ஸ் அப் சாட் ஸ்க்ரீன்ஷாட்டை போட்டு தனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறி இருந்தார்.

சில நாட்கள் கேப் விட்டு மீண்டும் வனிதா ரிவியூ செய்வதை தொடங்கி இருக்கிறார். இந்த வாரம் ஜோவிகாவும் நாமினேஷன் பட்டியலில் இருக்கிறார். அவர் தான் வோட்டிங்கில் கடைசி இடத்தில் இருப்பதாகவும், இந்த வார எலிமினேஷன் ஜோவிகாவாக தான் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நீங்க உருட்டுங்க… மீண்டும் கல்யாண சீன் வச்சிராதீங்கப்பா.. பாக்கியலட்சுமி டீமை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

இந்நிலையில் தான் வனிதா, தான் இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் போக போகிறேன். ரசிகர்களுக்கு மற்ற போட்டியாளர்களிடம் கேள்வி இருந்தால் வீடியோவாக தரும்படி அவர் ரிவியூவில் கேட்டு இருக்கிறார். அப்போ பிக்பாஸ் வோட்டிங் சும்மாவா?

இந்த வாரம் ஜோவிகாவிற்கு பதில் சரவண விக்ரமை வெளியேற்றுவார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வனிதா செய்யும் அலப்பறைகளால் தொல்லை தாங்காமல் ஜோவிகாவை வெளியேற்றவும் பிக்பாஸ் டீமிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடங்கப்பா முடியல… இனி இந்த கேரக்டர் மட்டும் செய்யவே மாட்டேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்..!

Related Articles
Next Story
Share it