ஆமா அவள நம்பி ஏமாந்துட்டேன்!.. காதலி மீது காண்டான பப்லு பிரித்திவிராஜ்!. அப்ப அது உண்மைதான் போல!..

தனது குழந்தைபருவம் முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் பப்லு பிருத்திவிராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்துள்ளார்.
இவர் பாக்கியராஜ், அஜித் என பல நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏற்கான்வே திருமணமாகி மகன் இருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தன்னை விட கிட்டதட்ட 30 வயது குறைவான ஷீட்டல் எனும் பெண்ணை காதலிப்பதாகவும் மேலும் இருவரும் இணைந்து தனியாக வீட்டில் வசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இதையும் வாசிங்க:உதவி கேட்டவரை கண்டுகொள்ளாமல் போன அஜித்… பின்னாடி அவர் செஞ்ச வேலைய பத்தி தெரியுமா?…
இது சமூக வலைதளங்களில் பலருக்கு கேளிக்கை செய்தியானது. பலரும் ‘வயதான இந்த காலத்தில் உனக்கு இதெல்லாம் தேவையா?’ என பல விதமாக கருத்துகளை பதிவிட்டு வந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் இது எதை பற்றியுமே துளி கூட கண்டு கொள்ளவில்லை.
அவர்களுக்கு பிடித்த முறையில் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். மேலும் ‘50 வயசு கிழவன் உனக்கு இது கேட்குதா?’ என மக்கள் கேட்ட கேள்விக்கு ‘ஆமாம் எனக்கு கேட்குது’ என ஓபனாகவே பப்லி பதிலளித்திருந்தார். இப்படி சென்ற இந்த ஜோடியானது சமீபத்தில் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்தது.கடந்த ஆண்டு பப்லுவின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியதும் இந்த ஆண்டு அவற்றை காணாவில்லை என்பதுமே இந்த பேச்சுக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது.
இதையும் வாசிங்க:கதை கேட்குறதுல அஜித் ஃபாலோ பண்ணும் நடிகர் யார் தெரியுமா?!. அட ஆச்சர்யமா இருக்கே!..
இதை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காத பப்லு தற்போது ஒரு பேட்டி ஒன்றில் இதை பற்றி பேசியுள்ளார். அதன்படி இவ்வளவு நாள் நான் ஏமாந்துவிட்டேன். இனியும் அவளை நம்பி நான் ஏமாறப்போவதில்லை… என்னுடைய வாழ்க்கையை நான் வாழப்போகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது 20 வயதில் தன்னுடன் பழகிய பெண் ஒருவர் இன்றும் போன் செய்து ‘பப்லு இன்னமும் நீ அழகாக இளமையுடன் இருக்கிறாய்’ என கூறியதாகவும் மேலும் தான் இன்றும் கண்ணனாகவே வாழ்கிறேன். அதனால் யார் என்னை விட்டு சென்றாலும் அதை பற்றி கவலை படபோவதில்லை… நான் ஒரு அழகான இளமையான தோற்றத்துடன் இருப்பதாகவும் தற்பெருமை பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு மீண்டும் சமூக வலைதளத்தில் தீயாய் பரவுகிறது. மேலும் இவ்வளவு பட்டும் இன்னும் இந்த தாத்தா அடங்கவில்லை எனவும் பார்ப்பவர்கள் கருத்தினை பதிவிட்டு வருகின்றனர்.
அதோடு அவர் கொடுத்த பேட்டியிலிருந்து இரண்டாவது மனைவியை பப்லு பிரிந்தது உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் வாசிங்க:ஓவரா பண்ணக்கூடாது!.. அமீர் மட்டும் நினைச்சிருந்தா!. ஞானவேல் ராஜாவை பொளந்துகட்டும் தயாரிப்பாளர்..