கமல்ஹாசனுக்கு போட்டியாக ஒரு குட்டி குழந்தைக்கு கட் அவுட் வைத்த தயாரிப்பாளர்… இப்படி ஒரு புரோமோஷனா??
உலக நாயகன் என்று புகழப்படும் கமல்ஹாசனின் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “இந்தியன்”. ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக வெளிவந்த இத்திரைப்படம் தமிழின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
இதில் சேனாபதியாக வந்த கமல்ஹாசனின் நடிப்பை பாராட்டாதவர்களே இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு அந்த முதிய கதாப்பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் கமல்ஹாசன். இந்த நிலையில் ஒரு குழந்தையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் “இந்தியன்” திரைப்படத்திற்கு போட்டியாக வெளிவந்து வெற்றியும் பெற்றிருக்கிறது. அத்திரைப்படத்தை குறித்த சுவாரஸ்யமான தகவலை குறித்து இப்போது பார்க்கலாம்.
தெலுங்கில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சிஸிந்திரி”. இத்திரைப்படத்தில் ஒரு குழந்தை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது. மேலும் இதில் நாகர்ஜூனா கதாநாயகராக நடித்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கில் மாபெறும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.
இந்த நிலையில் ஒரு நாள் திருப்பதிக்குச் சென்ற பிரபல தயாரிப்பாளரான காஜா மைதீன், “சிஸிந்திரி” திரைப்படத்தை அங்குள்ள திரையரங்கு ஒன்றில் பார்த்திருக்கிறார். அவருக்கு அத்திரைப்படம் மிகவும் பிடித்துப்போக அத்திரைப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடலாம் என முடிவெடுத்தாராம்.
“சிஸிந்திரி” திரைப்படத்தை நடிகர் நாகர்ஜூனாதான் தயாரித்திருந்தார். இதில் நடித்த அந்த குழந்தை நாகர்ஜூனாவின் மகனான அகில். இந்த நிலையில் நாகர்ஜூனாவின் உறவினர் ஒருவரிடம் பேசி இத்திரைப்படத்தின் டப்பிங் உரிமையை 17 லட்ச ரூபாய்க்கு வங்கினாராம் காஜா மைதீன்.
இதன் பிறகு இத்திரைப்படத்தை “சுட்டிக் குழந்தை” என்ற பெயரில் தமிழில் டப் செய்தாராம். மேலும் இத்திரைப்படம் வெளிவந்தபோது கமல்ஹாசனின் “இந்தியன்” திரைப்படமும் வெளிவந்திருக்கிறது. அப்போது சென்னை சத்யம் திரையரங்கில் கமல்ஹாசனுக்கு 60 அடியில் ஒரு கட் அவுட் வைத்திருந்தார்களாம்.
இதையும் படிங்க: ஹீரோவாக களமிறங்கும் இயக்குனர் கௌதம் மேனன்… பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய பிரபலத்துடன் இணைகிறாரா??
இந்த நிலையில் அதே திரையரங்கில் “சுட்டிக்குழந்தை” திரைப்படத்திற்கு 65 அடியில் ஒரு கட் அவுட் வைத்தாராம் தயாரிப்பாளர். மேலும் இத்திரைப்படத்திற்காக பல பத்திரிக்கைகளில் முழுபக்க விளம்பரமும் கொடுத்தாராம். இதனை தொடர்ந்து “சுட்டிக் குழந்தை” திரைப்படம் வெளிவந்து 50 நாட்கள் தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் திரையரங்குகள் நிறைந்திருந்ததாம். இவ்வாறு “இந்தியன்” திரைப்படத்தோடு போட்டிப்போட்ட “சுட்டிக் குழந்தை” திரைப்படமும் மாபெறும் வெற்றிப் பெற்றிருக்கிறது.