‘வீரம்’ பாப்பாவா அது? தமிழ் சினிமாவின் அடுத்த ஹீரோயின்.. எப்படி இருக்காங்க பாருங்க
veeram: சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு புதுமுக நடிகை அறிமுகமாகிறார் என்றால் கண்டிப்பாக அந்த நடிகை ஏதாவது ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்க வேண்டும் .ஏனெனில் அந்தளவுக்கு அடையாளம் தெரியாமல்தான் வளர்ந்த பிறகு காணப்படுகிறார்கள்.
ஆனால் விஸ்வாசம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் அஜித்துக்கு மகளான நடித்த அனிகா சுரேந்தர் மட்டும் அப்படியே தான் இருக்கிறார். அதனால்தான் அவர் க்ளாமர் லுக்கில் புகைப்படங்களை போடும் போதெல்லாம் ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகிறார்கள். காரணம் அவர் முகத்தில் இன்னும் அந்த சின்னபிள்ளைத்தனத்தின் லுக் தெரிவதுதான்.
இதையும் படிங்க: நான்தான் பூதங்களின் பூதம்… ஜீபூம்பா!.. 60களில் தெறிக்கவிட்ட மாயாஜாலப்படம்!..
இந்த நிலையில் அஜித் நடித்த வீரம் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருக்கும். அந்த பாப்பாவின் பெயர் யுவினா. வீரம் படத்தின் போது அஜித் யுவினாவை தூக்கி வைத்திருக்கும் மாதிரியான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.
இவர் முதலில் உறவுக்கு கைக் கொடுப்போம் என்ற சீரியலில் நடித்திருக்கிறார். அதன் பிறகுதான் வீரம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் யுவினா நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: இனிமே குக் வித் கோமாளி மொக்கை ஆகிடுமோ?.. இப்படி பண்ணிட்டாரே வெங்கடேஷ் பட்!..
இவர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் படத்திலும் நடித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு மகளாக நடித்திருப்பார். அதனால் இந்தப் படத்தில் அனுபமா அம்மா என்பதால் அனுபமாவின் கர்லிங் ஹேர்தான் யுவினாவுக்கு இருக்க வேண்டும் என தினமும் யுவினாவின் முடியை கர்லிங் செய்து கொண்டே இருப்பார்களாம். இவரின் லேட்டஸ்ட்டான பேட்டியை பார்த்த பல பேர் தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹீரோயின் ரெடி ஆகிட்டாங்கப்பா என்று கூறிவருகிறார்கள்.