More
Categories: Cinema News latest news

விஜய்-க்கு கெட்ட நேரம் வந்துவிட்டது!.. அரசியலுக்கு வந்தால் இது தான் நிலைமை!..

விஜய் அவர்கள் அரசியல் குறித்து காந்தா ராஜ் கருத்து :

விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஒரு நேர்காணலில் டாக்டர் காந்தாராஜ் அவர்கள் பேசியிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது,

தமிழ் சினிமாவில் தற்சமயம் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவரது நிலைமை எப்படி இருக்கும் என்று நடுவர் அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தார். விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அது அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.ஏனெனில் தற்சமயம் சினிமா துறையில் இருந்து அரசியல் வரும் அனைவருக்கும் இது பொருந்தும்.காரணம் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்.

Advertising
Advertising

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் :

சினிமாவில் இருந்து அரசியல் வந்தவர்களில் Mgr மற்றும் ஜெயலலிதா தவிர வேறு யாரும் அரசியலில் பெரிய அளவிற்கு நீடிக்க வில்லை.உதாரணமாக ஹிந்தியில் அமிதாப் பட்சன் மிக பெரும் புகழ் பெற்ற ஒரு நடிகர் ஆனால் அவரலும் கூட அரசியலில் நிலைக்க முடியவில்லை.

அதே போல கன்னடத்திலும் ராஜ் குமார் அவரே தான் சிவாஜிகணேசன் அவரேதான் Mgr அவரேதான் ஜெமினி கணேசன் ஆனாலும் அவரால் அரசியலில் நிலைக்க முடியவில்லை.இப்படி சினிமா துறையில் இருந்து அரசியல் துறையில் யாரும் நீடிக்க முடியவில்லை.

Vijay

அரசியலில் சொதப்பிய நடிகர்கள் :

அதேபோல் நம்ம ஊரை பொறுத்தவரை டி ராஜேந்தர் மற்றும் பாக்யராஜ் தமிழ் நாட்டில் உள்ள எல்லா தலைவர்களின் பெயர்களை வைத்தும் காட்சி ஆரம்பிச்சாங்க ஆனா அவங்ளாயும் அரசியலில் நீடிக்க முடியவில்லை. தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரேன் வரேனு சொல்லி எல்லாத்தையும் அம்போனு விட்டாரு.

இதையும் படிங்க- நம்பிக்கை துரோகம்!. மனதில் ஏற்பட்ட வேதனை.. விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டது இப்படித்தான்!..

ஆனால் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரும் அந்த காலத்துல இருந்து மக்களை நல்லா புரிஞ்சுகிட்டு அரசியலுக்கு வந்தாங்க அதுவும் இல்லாம அவங்களோட படத்துலயும் சமுதாய கருத்துகளை தெரிவித்து மக்கள் மனதில் இடம் பிடித்தனர். இன்றைய தலைமுறையினர் அரசியலில் வசனம் பேசி கவர் பண்ணும் நிறைய நடிகர்களை அரசியலில் தோற்கடித்துள்ளனர் அதே போல விஜயாலும் நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது.

Vijay

ஜெயலலிதாவிடம் குட்டு வாங்கிய நடிகர் விஜய் :

இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தனது மெர்சல் எனும் திரைப்படத்தில் ஆளப்போறான் தமிழன் எனும் பாடல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார் இந்த பாடல் எதற்காக எழுதப்பட்டது என்றால் பின்வரும் நாட்களில் இவர் அரசியலில் ஈடுபடுவதற்காக எடுக்கப்பட்ட இந்த பாடலில் வசனம் முழுவதும் இவரை கொண்டாடும் இடத்தில் இருந்தது இதனை பார்த்த ஆளும் கட்சியை சேர்ந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் ஒரு முறை விஜய் அவர்களை அவரது அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தார் இதையும் சென்றிருந்தார்.

ஆனால் போன இடத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வெளியிலேயே உட்கார்ந்திருந்தார் பிறகு அம்மா அவர்கள் அவரை அழைத்து இதுதான் உனக்கு கடைசி வார்னிங் ஒழுங்கா கிளம்பி போயிரு அப்படின்னு சொல்லி அனுப்பிட்டார் இந்த நிகழ்விற்கு பிறகு திரைப்படங்களில் அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு வசனங்களையும் இதே அவர்கள் உபயோகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay

மேலும் அவர் கூறியதாவது விஜய் அவர்கள் அரசியலில் இறங்குவது பற்றி சற்று யோசிக்க வேண்டும் அரசியலில் உள்ள தற்சமயம் நிகழ்வை புரிந்து கொண்டு, மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் கொண்ட ஒரு நடிகராக விளங்க வேண்டும்.

இப்போதைக்கு அவர் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் திமுக அரசாங்கமே நன்றாகத்தான் ஆட்சி செய்து வருகிறது ஆதலால் முழு தெளிவு பெற்று அரசில் இறங்குமாறு இதே அவர்களுக்கு நான் கேட்டுக்கொள்கிறேன் என்று காந்தராஜ் அவரது நேர்காணலில் விஜய்யை பற்றி கூறினார்.

இதையும் படிங்க- நம்பிக்கை துரோகம்!. மனதில் ஏற்பட்ட வேதனை.. விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டது இப்படித்தான்!..

Published by
prakash kumar

Recent Posts