சினிமாவில் நடன நடிகையாக கும்பலில் ஒருவராக நடனமாடி வந்த ஷர்மிலி கவுண்டமணியின் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். கவுண்டமணிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ‘கவர்ச்சி நடிகை ஆக வேண்டும் என ஆசைப்பட்ட என்னை கவுண்டமணி காமெடி காட்சியில் நடிக்க வைத்து என் கேரியரையே காலி செய்துவிட்டார்.

எனக்கு வந்த பல நல்ல வாய்ப்புகளை தடுத்து என்னை நடிக்கவிடாமல் செய்தார். அவருடன் நடிக்க நான் மறுத்தபோது எனக்கு வந்த பல வாய்ப்புகளை கெடுத்துவிட்டார். அவரை தவிர வேறு யாருடனும் நான் நடிக்க கூடாது என நினைத்தார். அவரால்தான் என் சினிமா வாழ்க்கையே சீரழிந்து போனது’ என பல புகார்களை கூறியிருந்தார்.
இதையும் படிங்க: கவுண்டமணி என் வாழ்க்கையையே நாசம் பன்ணிட்டாரு!.. ஷர்மிளி பகீர் பேட்டி…

இந்நிலையில், நடிகர், நடிகையரின் பல அந்தரங்க விஷயங்களை பேசி வரும் சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் காமெடி நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஊடகத்தில் ஒன்றில் பேசிய போது ‘ஷர்மிலி சொன்னது எல்லாமே பொய். நடன நடிகையாக நடிக்கும் அவருக்கு கிடைத்த சம்பளம் ஒரு நாளைக்கு ரூ.1500. ஆனால், அவரை காமெடி நடிகையாக மாற்றி ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் வாங்கி கொடுத்தவர் கவுண்டமணி. கவுண்டமணி கால்ஷீட் கொடுத்திருக்கும் போது அவர் படத்தில் ஷர்மிலி நடிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். மற்ற படங்களுக்கு எப்படி அனுப்புவார்?.. அவர் செய்தது சரிதான். ஷர்மிலி லட்ச லட்சமாய் சம்பாதித்தது கவுண்டமணியால்தான்.

ஷர்மிலிக்கு கவுண்டமணி வீடு வாங்கி கொடுத்தார். இதையெல்லாம் ஷர்மிலி மறக்க கூடாது. நன்றியோடு இருக்க வேண்டும். ஷர்மிலியை இப்போது எல்லோருக்கும் தெரியும் எனில் அதற்கு காரணம் கவுண்டமணிதான். நான் ஷர்மிலியுடன் சில படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு எல்லா உண்மையும் தெரியும். என்னிடமே ஷர்மிலி மனம் விட்டு பேசியுள்ளார். ஷர்மிலி நன்றி மறக்க கூடாது’ என பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு பொண்ணுக்காக இப்படி சண்டை போடுறீங்களே? முக்கோண காதலை மையப்படுத்தி வெளிவந்த படங்கள்
