சந்தேக பிறவியான ஜெனி… சிக்கி தவிக்கும் செழியன்… கோபிக்கு ஆப்படித்த ராதிகா…

by Akhilan |
சந்தேக பிறவியான ஜெனி… சிக்கி தவிக்கும் செழியன்… கோபிக்கு ஆப்படித்த ராதிகா…
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமில் இருக்கும் ஜெனியை வந்து பார்த்து சமாதானம் செய்கிறார் செழியன். உண்மையாவே நீ ஆஃபீஸ் போனியா இல்லை யாரையாவது பார்த்துட்டு வரியா என்கிறார் ஜெனி. ஒருவழியாக ஜெனியை சமாதனம் செய்து.விடுகிறார் செழியன்.

டின்னருக்கு பாக்கியா சப்பாத்தி, சிக்கன் கிரேவி, சிக்கன் 65, பன்னீர் மசாலா உள்ளிட்ட பதார்த்தங்களை செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து ஹாலில் உட்கார்ந்திருக்கும் கோபிக்கு வாயில் எச்சி ஊறுகிறது. ராதிகாவிற்காக காத்திருக்கிறார்.

இதையும் படிங்க: சூது கவ்வும் 2 படத்துல விஜய்சேதுபதி நடிக்க மறுக்க இதுதான் காரணமா?.. 3வது பார்ட் வேற வருதாம்!..

இதை பார்க்கும் ராமமூர்த்தி அவரை வெறுப்பேற்றிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு வருகிறார் ராதிகா. மயூ கேட்டுக்கிட்டதால அவளுடனே சாப்பிட்டு வந்துட்டேன் என்கிறார். கோபிக்கு சாப்பாடு என்ற ஒரு கேரியரை கொடுக்க முகர்ந்து பார்க்கிறார்.

மசாலா வாசனை வருகிறது அதனால் இது ஓட்ஸ் இல்லை என்ற நம்பிக்கையில் டப்பாவை திறக்கிறார். ஆனால் அதில் மசாலா ஓட்ஸ் இருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சியாகி விடுகிறார். அப்பொழுது பாக்யா பழனிசாமி பிறந்த நாளுக்காக ஸ்வீட் செய்து இருப்பவர்களுக்கு கொடுக்கிறார். இதை பார்க்கும் கோபி அவர் பிறந்தநாளுக்கு இவ ஏன் ஸ்வீட் செய்யணும் என்கிறார்.

இதையும் படிங்க: போயஸ் கார்டன்ல பொண்ணு கேட்குதோ!.. தனுஷ் குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமை.. பிரபலம் சொன்ன சீக்ரெட்!..

அருகில் இருக்கும் ராதிகா உங்களுக்கு என்ன அதுல கவலை என்கிறார். அவர்கள் என் குடும்பம். இது கேட்கும் ராதிகா கோபமாகி பாக்யாவுமா எனக் கேட்க அவ இல்லாமல் என்கிறார் கோபி. உங்களுக்கு போய் சமைத்துக் கொண்டு வந்த பாரு என சாப்பிட்டுக் கொண்டிருந்த கோபியிடம் இருந்து பாக்ஸை பிடுங்கி செல்கிறார்.

இதை அடுத்து செழியன் போனை நோண்டிக் கொண்டிருக்கிறார் ஜெனி. அதில் யாருக்கோ டியர் என அனுப்பி இருக்க நடு இரவு இரண்டு மணிக்கு அவரை எழுப்புகிறார். யாருக்கு டியர்னு அனுப்பி இருக்க எனக்கு கேள்வி கேட்க செழியனுக்கு எதுவும் புரியாமல் புலம்புகிறார்.

பின்னர் அது என் நண்பன் விஷ்ணு. டன் போட டியர்னு ஆச்சு என்கிறார். இப்பவே போன் பண்ணு என்கிறார் ஜெனி. செழியன் நடு இரவு ஜெனி காலையில் பேசுகிறேன் என்கிறார். அமைதியா இருந்து காலையில் செழியனை போன் பண்ண வைத்து அது ஆண் என தெரிந்து கொண்டு தூங்குகிறார் ஜெனி. இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு… அப்பாவை காலி செய்ய காத்திருக்கும் ரோகிணி… அப்பயும் விஜயா காண்டாகிடுவாங்களே!

Next Story