இனியாக்கு அடுத்த ஜோடி… பாக்கியாவுக்கு அடுத்த காதல்… என்னங்கப்பா எங்கள பாத்தா எப்படி தெரிது?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிசாமியுடன் அமர்ந்து பாக்கியா குடும்பத்தினர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். பின்னர் எழில் மற்றும் இனியா பாட்டு போட்டுக்கொண்டு ஆடி ஜாலி செய்துகொண்டு இருக்கின்றனர். பின்னர் பழனிசாமியின் அக்கா மகன் வந்து எல்லாருடனும் ஆடிக்கொண்டு இருக்கிறார்.
அவர் பெயர் விமல் என எல்லாரிடமும் அறிமுகம் செய்து வைக்கின்றனர். அவர் இனியாவை பார்த்ததும் ஜொள்ளு விடுகிறார். இனியாவிடம் பேசி அவரை குறித்து சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார். பழனிசாமியின் அக்கா கல்யாணம் விஷயம் பத்தி பேசிடலாமா என்கிறார். ஆனால் அவர் தங்கச்சியோ இல்ல வேண்டாம் இப்போ பேசுறது சரி கிடையாது என்கிறார்.
இதையும் படிங்க: அந்த பயம் வந்துடுச்சு போல!.. வேட்டையன் படத்தோட கிளாஷ் விடாத விஜய்.. வம்பிழுத்த ரஜினி ரசிகர்!..
இதையடுத்து அவங்க மாமியாரிடம் பேசலாமா எனக் கேட்க அப்போ ஈஸ்வரி வந்து என்ன பேசணும் எனக் கேட்க ஒன்னும் இல்லை என சமாளித்து விடுகின்றனர். பின்னர் விமல், இனியாவின் காலேஜ் குறித்து கேட்க அவர் எல்லாத்தையும் சொல்ல முடியாது என வெட்கப்படுகிறார். சரி நானே கண்டுபிடிக்கிறேன் என்று விமல் சொல்ல, பார்க்கலாம் என்கிறார் இனியா.
இருவரும் வீட்டுக்குள் சென்று பழனிசாமிக்கு கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். பாக்கியாவின் குடும்பம் போட்டோ எடுக்க நிற்க அப்போது அங்கு இருந்த பாக்கியாவை அழைத்து தன் பக்கத்தில் நிற்க வைத்து போட்டோ எடுத்து கொள்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: தலைவர் பன்ச்சை விட இதுதான் ஃபேமஸ்.. ஒரே ஒரு டையலாக்கால் ரஜினியை மடக்கிய நிழல்கள் ரவி