ராதிகா கர்ப்பத்தால் மனம் உடைந்து போன பாக்கியா… இருக்கும் தானே!... ஆனா?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகா கர்ப்பத்தினை குறித்து சொன்னவுடன் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பின்னர், கோபியுடன் அவருக்கான மகிழ்ச்சியான நினைவுகளை நினைத்து வருத்தப்படுகிறார். ராதிகா கீழே வரும் பாக்கியாவிடம் உங்களுக்கு எதும் கஷ்டமா இல்லையா என்கிறார்.
அதெல்லாம் இல்லை. நீங்க நல்லா சாப்பிடுங்க. உடம்பை பார்த்துக்கோங்க என்கிறார். உங்களுக்கு தெரிஞ்சதை யாருக்கும் சொல்லாதீங்க எனக் கூறிவிடுகிறார். அவர் வருத்தப்பட்டு கொண்டு இருக்க அப்போ செழியன் மற்றும் எழில் வந்து பாக்கியாவை சுற்றி விளையாடுகின்றனர்.
இதையும் படிங்க: பிரபாஸோட 500 கோடி பட்ஜெட் படத்துக்கு இப்படியொரு ஆப்பா?.. அந்த படத்தோட அட்டுக் காப்பின்னு சொல்றாங்க!
பிள்ளைங்க இவ்வளோ வளர்ந்துட்டாங்க. அவங்களுக்கே பிள்ளை இருக்கப்ப இவர் குழந்தை பொறக்க போகுதுனு சொன்னா எல்லாரும் என்ன நினைப்பாங்க. எப்படி கிண்டல் செய்வாங்க எனக் கவலைப்படுகிறார். எழில் அங்கு வர என்ன யோசனை எனக் கேட்கிறார். இல்ல ரெஸ்டாரெண்ட் நினைச்சிட்டு இருக்கேன் என்கிறார்.
அடுத்து பாக்கியா ரெஸ்டாரெண்டில் பழனிசாமி கூடை பூவுடன் வந்து நிற்கிறார். இதை பார்த்து என்ன சார் இவ்வளோ எனக் கேட்க என் பிரண்ட் பூக்கடை பிசினஸ் செய்றான். ரெண்டு கூடை கொடுத்தான். ஒன்னை வீட்டில் வச்சிட்டு. இன்னொன்னை எடுத்துட்டு வந்திருக்கேன் என்கிறார். கடவுள் படத்துக்கு போடுங்க என்க ஏன் நான் வச்சிக்க கூடாதா என பாக்கியா சந்தோஷமாக பூவை வைத்து கொள்கிறார்.
இதையும் படிங்க: ரஜினி, கமல், விஜய், பிரபாஸ், அல்லு அர்ஜுன்.. யாரு பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷான்னு இந்த ஆண்டு தெரிஞ்சிடும்!..
இதையடுத்து பழனிசாமி கிளம்பிவிடுகிறார். வீட்டுக்கு வரும் பழனிசாமி வித்தியாசமான துணிகளுடன் வருகிறார். அவர் அம்மா இப்படி நீ போட மாட்டியே எனக் கேட்க இப்போ போடுவேன் என்கிறார். பின்னர் பாக்கியா தன்னை காதலிப்பதாக கூற அப்போ தேதி பார்த்து விடலாமா என்கிறார். அதெல்லாம் இப்போ வேண்டாம். கொஞ்சம் நாளாகட்டும் என்று சொல்லி டீ சர்ட்டை போட்டு சீன் போடுவத்துடன் இன்றைய எபிசோட் முடிந்தது.