ரஜினி, கமல், விஜய், பிரபாஸ், அல்லு அர்ஜுன்.. யாரு பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷான்னு இந்த ஆண்டு தெரிஞ்சிடும்!..
இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரம் வசூலில் இப்போதைக்கு யார் என்பது இந்த ஆண்டு தெரிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்கு காரணம் பல முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாக்கி வரும் வேட்டையின் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது. அந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரபாஸோட 500 கோடி பட்ஜெட் படத்துக்கு இப்படியொரு ஆப்பா?.. அந்த படத்தோட அட்டுக் காப்பின்னு சொல்றாங்க!
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகிறது. 25 வருடங்கள் முன்பாக வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சித்தார்த், எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது. வித்தியாசமான கதை களத்துடன் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கடந்தாண்டு வெளியான விஜய்யின் லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இந்த படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 100 கோடி வசூல் செய்த மார்க் ஆண்டனி!.. 10 கோடியாவது ரத்னம் வசூல் செய்யுமா?.. 3 நாள் வசூல் எவ்வளவு?..
தமிழில் இந்த படங்களை தவிர்த்து அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா போன்ற படங்களும் பெரிய வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் நிலைமை எப்படி இருக்க தெலுங்கு திரையுலகில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் பான் இந்தியா ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி நடித்துள்ள கல்கி திரைப்படம் வெளியாகிறது. வசூலில் மிகப்பெரிய சாதனையை அந்த படம் இந்த ஆண்டு பெறும் எனக் கூறுகின்றனர். அந்த படத்துக்கு போட்டியாக அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படிங்க: ஊசி போட்டு உடம்பை பெருசாக்கினாரா?.. கடை திறக்க இத்தனை கோடி கேட்குறாரா?.. ஹனி ரோஸ் ஆச்சர்யங்கள்!..
இத்தனை பெரிய படங்களில் இந்த ஆண்டு நம்பர் ஒன் வசூல் வேட்டையாட போவது எந்த படம் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புஷ்பா 2 மற்றும் கல்கி படங்கள் தமிழ் சினிமா படங்களை தூக்கி சாப்பிட்டு விடும் என டோலிவுட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் மற்றும் விஜய் இந்த ஆண்டாவது பான் இந்தியா வெற்றியை கொடுப்பார்களா? என்பதை காத்திருந்து காண்போம்.