கோபிக்கு ஆளுக்கு ஆள் டயலாக் விடுறாங்களே… என்னங்க இது அநியாயமா இருக்கே…பாவமில்ல அவரு!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா ஸ்ருதியிடம் உன்னை பாக்கணும் போல இருக்குமா நான் அங்க வீட்டுக்கு வரவா என்கிறார். வேண்டாம் நான் ஸ்டுடியோவுக்கு செல்வதாக போனை கட் செய்து விடுகிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
விஜயா யோசித்து கொண்டு இருக்க பார்வதி வந்து அவ மாமியாபோலவும் நான் மருமகள் போலவும் எகிறி எகிறி பேசுறா. அவ என்னை கொஞ்சம் கூட மதிக்கல பாரு. என் பிள்ள இங்க வரவே மாட்டான் என பேசிக் கொண்டிருக்கிறார். உடனே பார்வதி, அண்ணன் முத்து கூட போக ரெடி ஆகிட்டாரு.
இதையும் படிங்க: தட்டப்போராறாம் தூக்கி… ஷூட்டிங் மட்டும்தான் பாக்கி.. தலைவரை வச்சு தெறிக்க விடப்போறாராம் லோக்கி!..
ரவி போயிட்டான். இப்படியே போனா நீ தனியா நிக்கணும் என்கிறார். கிச்சனில் இருக்கும் மீனாவிடம் தண்ணி கேட்கிறார் ரோகிணி. அவர் தண்ணி கொடுத்து கவலைப்படாதீங்க சீக்கிரம் நல்லது நடக்கும் என்று ரோகிணிக்கு ஆறுதல் சொல்கிறார். ரோகிணி அத்தை வேற எதை பத்தியும் யோசிக்காம இருந்தா சரிதான் என்கிறார். இதை கேட்டு மீனா குழம்புகிறார்.
அடுத்து, ரவிக்கு ஒரு கொரியர் வருகிறது. அவர் வீட்டில் இருப்பதாக நினைத்து ரவியை அழைக்கிறார் அண்ணாமலை. அந்த சமயத்தில் முத்து, ரவி தான் இங்க இல்லையே என்கிறார். இதை கேட்டு அண்ணாமலை சோகமாகி விடுகிறார். பிரச்னையில் குளிர் காய நினைத்த ரோகிணி முத்து அடிச்சது அவங்க அப்பாக்கு கோபம் இருக்கும் தானே. எப்படி ரவி வருவான் ஸ்ருதி எப்படி விடுவாள் என பேசுகிறார்.
இதையும் படிங்க: எலேய் இருங்கப்பா… யாரு இதுல ஹீரோ, ஹீரோயின்… முத்து, மீனாவா? ஸ்ருதி, ரவியா? குழப்பமா இருக்கே!
ரவி வருவான் என தான் நம்புவதாக கூறுகிறார். அப்பொழுது மீனா முத்துவிடம் மாமா ரொம்ப பீல் பண்றார். நாம ஏதாவது இதுக்கு பண்ணியாகணும் என்கின்றனர். ஸ்ருதி வீட்டில் அவரை ரெக்கார்டிங்குக்கு செல்ல வேண்டாம் என சுதா சொல்லிக்கொண்டு இருக்க என் வேலையை நான் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறு கிளம்பி விடுகிறார். ஸ்ருதியை பார்க்க மீனாவும், முத்து ரவியை பார்க்கவும் செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.