தட்டப்போறாராம் தூக்கி... ஷூட்டிங் மட்டும்தான் பாக்கி.. தலைவரை வச்சு தெறிக்க விடப்போறாராம் லோக்கி!..

சூப்பர் ஸ்டார்ங்குற பட்டத்துக்கு எத்தனை போட்டி வந்தாலும், பல ஆண்டுகளா "கோழி தனது குஞ்சினை" பாதுகாப்பது போல பாத்துக்கிட்டு வர்றாரு ரஜினிகாந்த். 'இனி இவர் படம் ஓடாது', 'இவரு அவ்ளோதான்', 'இனி முடியாது' இது மாதிரியான விமர்சனத்துக்கெல்லாம் தரமான படங்களை கொடுத்து "போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம்" ன்னு பஞ்ச் பேசி தன் படத்தோட வசூலை தெறிக்க விட்டவர் இவர்.

மூன்று தலைமுறை ரசிகர்களை தன் பக்கம் இன்னைக்கும் இழுத்து வெச்சிருக்கார் ரஜினி. அட அதைத்தாங்க அவரோட "ஜெயிலர்" பட பாட்டு மூலமா சொல்லிருப்பாங்க. 'அனிருத்' இசையில் சமீபத்துல தியேட்டர் ஸ்கிரீனை கிழிக்கிற அளவுக்கு வெறியேத்தியன பாட்டு தான் அது.

"உன் அலும்ப பாத்தவன், உங்க அப்பன் விசில கேட்டவன், உன் மகனும் பேரனும் ஆட்டம் போட வைச்சவன்", அந்த பாட்டுல வர்ற இந்த லைன் கற்பனை மிகைப்படுத்த பட்டதுன்னு சொல்லவே முடியாது. அட ஆமால்ல, உண்மைதான்யா அப்படீன்னு ரஜினியை பிடிக்காதவங்க கூட சொல்லுற மாதிரிதான் இருந்தது.

rajini jaillor 2

rajini jaillor 2

சுமாரா ஓடின சிலப்படங்களுக்கு அப்பறமா ரஜினிக்கு சூப்பர் ஹிட் ஆனா படம் "ஜெயிலர்" தான், ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு பழைய இடத்துக்கு வந்துட்டாருன்னே சொல்லலாம். அப்படித்தான் அந்த படத்தோட வசூலும், வரவேற்பும் இருந்துச்சி. இப்போ இதுல இன்னொரு விசேஷம் என்னன்னா சமீபத்துல தொடர் வெற்றிகளை கொடுத்துட்டு வர்ற லோகேஷ் கனகராஜ் கூட கைகோர்க்கப்போறாரு ரஜினி.

படத்தோட பேரை இன்னும் கொஞ்ச நாளல்ல வெளிவிடப்போற படக்குழு, முதன் முதலா ஒரு போஸ்டர் படத்தை வெளியிட்டாங்க. கையில ஒரு கடிகாரத்தை வெச்ச மாதிரி வந்திருக்கிற அந்த லுக்குக்கு அப்புறமா படத்த பற்றிய எதிர்பார்ப்பு வேற லெவல்தான் போங்க. படத்துக்கான கதையை பக்காவா எழுதி முடிச்சிட்டாரு லோக்கி.. ஷூட்டிங் மட்டும்தான் பாக்கி என சொல்கிறது அவரின் நெருங்கிய வட்டாரம்.

இப்படி இருக்கும் போது இதெல்லாம் எடுபடுமான்னு தெரியல, ரஜினி எது செஞ்சாலும் அவர் ரசிகர்கள் ஏத்துக்குவாங்க அப்படிங்குற காலம் இன்னும் இருக்குதான்னு தெரியலே, அதே மாதிரி இப்போல்லாம் விஜய்யையும், ரஜினியையும் ஒப்பிட்டு நிறைய செய்திகள் வருது. இதெல்லாம் தப்பு அவரு வேற, இவரு வேற அப்படின்னு பிரபல பத்திரிக்கையாளர் சுப்பையன் சொல்லிருக்காரு ஒரு பேட்டியில.

 

Related Articles

Next Story