செழியனை தொடர்ந்து சந்தேகப்படும் ஜெனி… இன்னும் பாக்கியாவுக்கு வேலை இருக்கும் போலயே!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் உட்கார்ந்து மொபைலில் தன்னுடைய வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார். அப்போ ஜெனி யாரிடம் பேசுற. எதுக்கு இவ்வளோ பேசுற என தொடர்ந்து கேள்வி கேட்கிறார். இருந்தும் செழியன் மெதுவாக பதில்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
இதை தொடர்ந்து, ஈஸ்வரி கால் வலி குறித்து ராமமூர்த்தியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு வரும் எழில் நான் கால் அமுக்கிவிடுகிறேன் என்கிறார். ஆனால் ஈஸ்வரி மூஞ்சில் அடித்த போல எழுந்து ரூமுக்குள் சென்றுவிடுகிறார். இதை பார்க்கும் அமிர்தா மன்னிச்சிடுங்க எழில். பாட்டி என்னால தானே உங்க கிட்ட இப்படி நடந்துக்கிட்டு இருக்காங்க. நான் இதை சொல்லி இருக்கவே கூடாது எனக் கலங்குகிறார்.
இதையும் படிங்க: அதை நினைச்சா அடிவயிற்றில் நெருப்பைப் போட்டு பிசைவது போல இருக்கு…. சிவாஜியா இப்படி சொல்வது?
ஆனாலும் எழில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என அமிர்தாவை சமாளிக்க ரொமான்ஸ் செய்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா கூப்பிட்டு விட எழில் ஓடிச்சென்று நல்ல பிள்ளை போல உட்கார்ந்து விடுகின்றார். அமிர்தா சமாளித்து சமைக்க சென்று விடுகிறார்.
அடுத்ததாக, பழனிசாமி அம்மா அவரிடம் பேசிக்கொண்டு இருக்கின்றார். உன் பிறந்தநாளை கிராண்ட்டா செய்யணும். அதுக்கு நீ ஓகே சொல்லணும் என்கின்றார். அவரும் சரியென கூறிவிடுகிறார். வீட்டில் பாக்கியா கிச்சனில் சமைத்து கொண்டு இருக்கிறார். ஜெனி நானும் சமைக்கிறேன் எனக் கூற ஈஸ்வரிக்கு புறை ஏறிவிடுகிறது.
இதையும் படிங்க: பார்த்திபன் சொன்ன கதையை கேட்டு மெர்சல் ஆயிட்டேன்!.. ராமராஜன் சொல்றதை கேளுங்க!..
அவர் அம்மாவிடம் பேசிக்கொண்டு பிறந்தநாள் கேட்டரிங்கை நீ எடுத்துக்கோ என்கிறார். அவரும் ஓகே சொல்லிவிட அப்போ பழனிசாமி வருகிறார். இருவரையும் பேசிக்கொண்டு இருக்க சொல்லி விட்டு அம்மா எழுந்து செல்கிறார். தள்ளி நின்னு இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.