பொருட்காட்சி ரெடி.. ஆனா இதுல பாக்கியா கடை மட்டும் தான் இருக்கும் போல..! ஒரு நியாயம் வேணாமாப்பா..!

by Akhilan |
பொருட்காட்சி ரெடி.. ஆனா இதுல பாக்கியா கடை மட்டும் தான் இருக்கும் போல..! ஒரு நியாயம் வேணாமாப்பா..!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் காண்ட்ராக்ட்டை மாற்றிவிட வந்தவரிடம் கொடுத்து விடும்படி ஈஸ்வரி சொல்லி அழைத்து வருகிறார். பாக்கியா வெளியில் வந்தவர். நான் தான் காண்ட்ராக்ட்டை தரமாட்டேன். நான் தான் நடத்துவேன் எனச் சொல்லி அனுப்புகிறார்.

இதையடுத்து ஈஸ்வரி உனக்கும் புத்தி இல்ல. சொல்றதையும் புரிஞ்சிக்க மாட்டிங்கிறே என்கிறார். அதனையடுத்து ராமமூர்த்தி, எழில், அமிர்தாவுடன் பொருட்காட்சியில் இருக்கும் காண்டீனை பார்க்க வருகின்றனர். இதை பார்த்து ராமமூர்த்தி பாக்கியாவின் வளர்ச்சியை கண்டு ஆச்சரியப்பட்டு போகின்றனர். இதையடுத்து ஈஸ்வரி புட்ஸ் போர்ட்டை மாட்டுகிறார் எழில்.

இதையும் படிங்க: அய்யோ பத்திக்கிச்சு!.. பிக் பாஸ் முடிஞ்சதும் பூர்ணிமா அந்த போட்டியாளர் வீட்டுக்கு போகப் போறாராம்?..

வீட்டுக்கு வரும் பாக்கியா தன்னுடைய டீமுடன் சேர்த்து ஸ்நாக்ஸ் செய்து சமைத்து கொண்டு இருக்கிறார். எல்லாரும் செல்வியை கலாய்த்து கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து இயற்கை உணவுகள் செய்யலாம் என பாக்கியா ஐடியா கொடுக்கிறார். இதனை தொடர்ந்து, எல்லாரும் அங்கிருந்து விட்டு வீட்டுக்கு வருகின்றனர். இரவு சாப்பாடுக்கு அனைவரும் உட்கார்ந்து இருக்க சிக்கன், சப்பாத்தி செய்து வைத்து இருக்கிறார் பாக்கியா.

இதை பார்த்த கோபிக்கு எச்சில் ஊறுகிறது. ராதிகாவிடம் சமைச்சிட்டியா, எதுவும் ஆர்டர் செய்யணுமா எனக் கேட்கிறார் கோபி. இவ்வளோ நேரம் ஆச்சு? சமைக்காம இருப்பேனா. உங்க ஃபேவரிட் புட் தான் செஞ்சிருக்கேன் எனக் கூற கோபி ஆச்சரியமாக என்ன என்று கேட்கிறார் ஓட்ஸ் என ராதிகா கூறியதுடன் சப்பென்று ஆகிவிடுகிறார். இதை தொடர்ந்து கோபியிடம் சாப்பிடலையா எனக் கேட்க ராதிகா ஓட்ஸ் செஞ்சிருக்கா என்றார்.

இதையும் படிங்க: நீங்களாம் பெரிய ஒழுங்கு.. சண்டை போட்டா தப்பா..? சிறகடிக்க ஆசையில் இந்த கொலைவெறி தேவையா..?

சத்தமாக பாக்கியா எல்லாரும் வரணும் என்க, ராதிகா எல்லாருமா எனக் கேட்க எல்லாரும்னா எல்லாரும் தான் எனக் கூறுகிறார். இதை பார்த்த ஈஸ்வரி, கோபி அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து கோபி சாப்பிட உட்கார ராதிகாவிடம் ஏன் பாக்கியாவிடம் பேசுற எனக் கேட்க இந்த வீட்டில் இருந்தா பேசுவேன்.

இல்ல வாங்க நம்ம வீட்டுக்கு போவோம் என்கிறார். ஆனால் கோபி ஜர்க் ஆகி நீ பாக்கியா கிட்ட பேசக்கூடாது என்கிறார். அதெல்லாம் முடியாது எனக் கடுப்புடன் சொல்லிவிட்டு ராதிகா செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story