More
Categories: latest news television

கணேஷ் விஷயத்தை குடும்பத்துக்கிட்ட சொன்னா எழில் கடுப்பாகிடுவாரோ..! பாக்கியாவுக்கு அடுத்த சவால்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் வெயிட் செய்து கொண்டு இருக்க ரூமுக்கு போலயா என்கிறார் கோபி. அம்மாவுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் எனச் செழியன் கூற இதுல என்ன இருக்கு என்கிறார். மினிஸ்டர் கிட்ட பாராட்டு வாங்கிட்டு அம்மா வராங்க.

என்ன ஸ்டேஜ் போட்டா பாராட்டுனாங்க எனக் கோபி நக்கலாக கூறுகிறார். இதையடுத்து பாக்கியா வீட்டுக்குள் வர செழியன் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து பாராட்டுகிறார். ராமமூர்த்தி சந்தன மாலையை வாங்கி இதானமா மினிஸ்டர் போட்ட மாலை என கோபியை வெறுப்பேற்றுகிறார்.

இதையும் படிங்க: அடக்கொடுமையே!.. எல்லாத்துக்கும் ரெடியான ஹீரோயின்!.. 2 வருஷத்துல லேடி சூப்பர்ஸ்டார் ஆகிடணுமாம்!

உடனே கோபி இது என்ன பெருமை எனக்கும் தான் நிறைய பெரிய ஆள் பாராட்டி இருக்காங்க. ஆனா மினிஸ்டர் பாராட்டுனது இல்லை தானே என கலாய்க்கிறார். இதையடுத்து அங்கு வரும் ஈஸ்வரி பாக்கியாவை பாராட்டி தள்ளுகிறார். கண்ணீருடன் அவரை கட்டிக்கொள்ள கோபிக்கு ஷாக் ஆகிவிடுகிறது.

அடுத்து, கிச்சனில் இருக்கும் பாக்கியா கணேஷனை நினைத்து பயப்படுகிறார். அதை தொடர்ந்து பழனிசாமிக்கு கால் செய்து கூற அவர் எழிலிடம் கூறிவிட சொல்கிறார். அந்த நேரத்தில் எழில் வர அவரை அழைத்து யாரோ கதைப்போல அமிர்தா விஷயத்தை சொல்ல எழில் என்ன சினிமா மாதிரி இருக்கு என்கிறார்.

இதையும் படிங்க: கருணாநிதி கதாசிரியராக மாற காரணமே அந்த நடிகர்தானாம்!. இது தெரியாம போச்சே..

பாக்கியா தொடர்ந்து பேச வர நிலா அப்பாவென கூப்பிட்டுக்கொண்டே ஓடி வந்து விடுகிறார். இதனால் பாக்கியா எழிலை அனுப்பி வைத்து விடுகிறார். அடுத்த நாள் காலையில் குடும்பத்தில் ஈஸ்வரி, ராமமூர்த்தி, கோபி, ராதிகா, செழியன் இருக்க ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என வருகிறார். ராதிகா நான் இருக்கலாமா? எனக் கேட்க அது உங்க இஷ்டம் என்கிறார். ராதிகா ரூமுக்கு போறேன் எனக் கிளம்ப கோபி பிடித்து நிறுத்தி விடுகிறார்.

பின்னர் பாக்கியா தயங்கி கொண்டே சொல்ல வர கோபி கடுப்பாகி நான் கிளம்புறேன் என எழுந்துக்க அப்போ சாயிந்தரமே சொல்வதாக பாக்கியா சொல்கிறார். தொடர்ந்து அங்கு வரும் எழில் என் ப்ரண்டோட அப்பா ரெஸ்டாரெண்ட்டை கை மாத்த இருக்கார் எனக் கூறி பாக்கியாவை பேச அழைத்து செல்கிறார்.

அங்கு இருவரும் காத்து இருக்க பழனிசாமியும் வந்து இணைந்து கொள்கிறார். தொடர்ந்து அந்த ஓனரிடம் பேச அவர் 2 லட்சம் அட்வான்ஸ் மாசம் 60 ஆயிரம் வாடகை என்கிறார். இதில் பாக்கியா அதிர்ந்து நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: அது ‘பாஸ்’ இல்லைங்க! தளபதி 68 பற்றி அர்ச்சனா கல்பாத்தியே சொன்ன சூப்பர் தகவல்!

Published by
Akhilan

Recent Posts